அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'வலிமை'. இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜிப்ரான் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் (AK62) குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். அஜித்திற்கு நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
![மீண்டும் அஜித்- நயன்தாரா ஜோடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-ajith-new-film-script-7205221_15032022172213_1503f_1647345133_1012.jpg)
அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
![AK61 லுக்?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14740379_ak.jpg)
இதையும் படிங்க: AK61 - இந்தியன் மணி ஹெய்ஸ்ட் கதையா.. ?