ETV Bharat / state

துணிவு திரைப்பட ரிலீஸின்போது அஜித் ரசிகர் மரணம் - தாயார் கமிஷனர் ஆபிஸில் புகார்! - சென்னை செய்திகள்

துணிவு பட கொண்டாட்டத்தின்போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி கீழே விழுந்து பலியான ரசிகரின் தாயார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

துணிவு திரைப்படத்தின் போது அஜித் ரசிகர் மரணம்- தாயார் புகார்...

author img

By

Published : Jan 12, 2023, 11:15 PM IST

Updated : Jan 13, 2023, 3:08 PM IST

துணிவு திரைப்பட ரிலீஸின்போது அஜித் ரசிகர் மரணம் - தாயார் கமிஷனர் ஆபிஸில் புகார்!

சென்னை: நடிகர் அஜித்தின் துணிவு படம் வெளியான நிலையில், நேற்று நள்ளிரவு சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கு முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வந்த வாகனங்களை மறித்து வாகனங்களின் மீது ஏறி ரசிகர்கள் ஆட்டம் போட்டனர்.

அப்போது கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது ஏறி நடனமாடிய சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்ற அஜித் ரசிகர் லாரியிலிருந்து கீழே குதிக்கும் போது படுகாயமடைந்து பலியானார். இந்த நிலையில் உயிரிழந்த பரத்குமாரின் தாயார் லலிதா மற்றும் அவருடைய குடும்பத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

அதில் தனது மகன் உயிரிழந்தது எப்படி என்பது குழப்பம் இருப்பதாகவும், அவ்விடத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குழப்பத்தை சரி செய்து, சம்பந்தப்பட்ட வாகனத்தின் மூலம் காப்பீட்டு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகாரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் பதிவு செய்த வழக்கில் எந்த வாகனத்தில் இருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது என்ற விவரங்கள் இல்லை எனவும், அது குறித்து கேட்டால் நீங்களே விசாரித்து சிசிடிவி கேமராவை கொண்டு வந்தால் நடவடிக்கை எடுப்பதாக கோயம்பேடு போக்குவரத்து போலீசார் அலைகழிப்பதாகவும் பரத்குமார் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பரத்குமாரின் குடும்பத்தினர் தங்களது மகன் மீது தான் தவறு, ஆனால் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வாகனத்தின் மூலம் காப்பீடு பெற்று தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், வாகனத்தில் இருந்து இறங்கும்போது அவரது சட்டை மாட்டியிருப்பதாகவும் அதனால் தான் கீழே விழுந்து பலியாகி இருக்கிறார் எனவும் தெரிவித்த அவர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது தவறு எனவும், இடுப்புக்கு கீழ் உள்ள பாகம் நசுங்கி இருப்பதால் அந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி இருக்க வேண்டும் எனவும்; அது குறித்து போலீசார் தான் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

தொடர்ந்து நடிகர் விஜய் போன்று அஜித், ரசிகர்களை சந்திப்பதில்லை என்றும், மன்றம் வைத்துக் கொள்வதில்லை என்றாலும் சத்தம் இல்லாமல் பலருக்கு அவர் உதவி செய்து வருவதாகவும், அதேபோன்று உயிரிழந்த தனது ரசிகரின் குடும்பத்தினருக்கு அவர் உதவ முன் வர வேண்டும் எனவும் பரத்தின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:Bank server Hacking: கூட்டுறவு வங்கிய சர்வரை ஹேக் செய்து கொள்ளை.. டெல்லியில் சிக்கிய நைஜீரியர்கள்..

Last Updated : Jan 13, 2023, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.