சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு தபால்களுக்கான அஞ்சலகத்திற்கு வந்த கொரியர் பார்சல்களை சுங்கத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனா்.
அப்போது, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு முகவரிக்கு பிரான்ஸ்சிலிருந்து ஒரு கொரியர் பார்சல் வந்திருந்தது.
அந்தப் பார்சலில் முக அழகு கிரீம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, கொரியர் பார்சலை பிரித்துப் பாா்த்தபோது, அதற்குள் விலை உயர்ந்த புளூபனிஷா் ரக 158 போதை மாத்திரைகள், 20 கிராம் போதை பவுடா் இருப்பது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் இருக்கும் என அலுவலர்கள் கணக்கிட்டுள்ளனர். இதுகுறித்து சுங்கத் துறையினா் வழக்குப்பதிவு செய்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், அரும்பாக்கம் முகவரி, போன் நம்பா் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பாா்சலில் குறிப்பிடப்ட்ட பெயருடை நபர் அப்பகுதியில் சில மாதங்கள் வசித்துவிட்டு காலி செய்து விட்டார். ஆனால், தற்போது அவருடைய பெயரில் போதை மாத்திரை பார்சல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கு: மார்ச் 22ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவை ரத்து!