ETV Bharat / state

சென்னையில் கடும் பனிமூட்டம்.. விமான சேவை பாதிப்பு!

author img

By

Published : Nov 27, 2022, 12:26 PM IST

சென்னை விமான நிலைய பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

விமான சேவைகள் பாதிப்பு
விமான சேவைகள் பாதிப்பு

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று (நவ. 27) காலை 6:30 மணியிலிருந்து கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

இன்று காலை 6:30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், மஸ்கட்டில் இருந்து 284 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. மேலும் இது போயிங் ரக பெரிய விமானம் என்பதால், சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அதை போல் காலை 6:55 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானம் 182 பயணிகளுடன் சென்னைக்கு வந்தது. சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்த பின் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது..

இதேபோல் சென்னையில் இருந்து புறப்படும் ஹைதராபாத் உள்ளிட்ட 8 விமானங்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதையும் படிங்க: 'ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.