சென்னை ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படையில் புதிதாக பணியில் சேரும் வீரர்களுக்கு ஆட்டோமொபைல் டெக்னீஷியன், ஃபிட்டர், காவல் துறை டிரேடுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியை 492 வீரர்கள், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் பெற்றனர்.
இப்பயிற்சி நிறைவடைந்ததையடுத்து, பயிற்சி முடித்த வீரர்களின் நிறைவு அணிவகுப்பு நேற்று (டிச. 04) நடைபெற்றது. பயிற்சி மையத்தின் அலுவலர் தினேஷ்சிங் தகார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்தப் பயிற்சியில் சிறந்து விளங்கிய ஆல்ரவுண்டர் கோப்பை சுமன் பிரதான், ஆகாஷ் பதவுரியா, அமன் கமார் சைனி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும், ரூபக் குமார் சிங், தீபக் சிங், பர்மீந்தர், அமியேந்து மோடக் ஆகியோருக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: கடற்படை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பைக் பேரணி!