சென்னையில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் (ஏஐசிடிஇ ) ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக வந்த விளம்பரங்கள் தவறானவை என்றும், இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ-யின் தென்மண்டலத் தலைவர் சுந்தரேசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, "அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் அலுவலர்கள் என்று கூறிக்கொண்டு வட்ட, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மண்டலத் தலைமை அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக வந்துள்ள தகவல்கள், விளம்பரங்கள் போலியானவை; பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம்.
மேலும், ஆள்சேர்ப்பு குறித்த போலியான செய்திகள், விளம்பரங்கள் வெளியாகியிருப்பது குறித்து தங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு எதையும் ஏஐசிடிஇ அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது www.aicte.india.org என்ற இணைய தளத்திலோ வெளியிடப்படவில்லை.
எனவே, இத்தகைய போலியான அறிவிப்புகளுக்கு ஏஐசிடிஇ பொறுப்பாகாது. இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், போலி நபர்களுக்கு எதிராகச் சட்டப்பூர்வ குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆம்பளைய இருந்த வாங்க பார்ப்போம் - வம்பிழுக்கும் மதுப்பிரியை