சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக அக்கட்சியின் சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கூட்டம் நடைபெறும் திருமண மண்டப பகுதிகள் வாழைமரத் தோரணங்கள், பேப்பர் கொடிகள், தென்னை ஓலைகள் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அதனை கடைப்பிடிக்கும் விதமாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் கோயில் போன்ற வடிவத்தில் அரங்கம் அமைக்கப்பட்டு, யானை சிலைகள் வைத்து வரவேற்பு வழங்கப்படுகிறது.
அதற்கு முன்பாக பத்திற்கும் மேற்பட்ட, தடுப்புவளைவுகளை வைத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கேரள செண்ட மேளம், குதிரை வரவேற்பு, அதிமுக தலைமை அலுவலகம் போன்ற முகப்பு, பேப்பர் கொடிகள் அசையும் யானைகள் உள்ளிட்டவைகளும் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ். மணியன், க. பாண்டியராஜன் உட்பட அதிமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் கூட்ட அரங்கிற்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இதையும் பார்க்க: அதிமுக பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர்கள்!