ETV Bharat / state

மின் கட்டணம் , வீட்டு வரி உயர்வைக் கண்டித்து அதிமுக வரும் 25ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு! - அதிமுக போராட்டம் அறிவிப்பு

வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

அதிமுக வரும் 25ஆம் தேதி போராட்டம்
அதிமுக வரும் 25ஆம் தேதி போராட்டம்
author img

By

Published : Jul 19, 2022, 10:50 PM IST

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை , தமிழ்நாடு மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தும்.

மக்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்த 'திராவிட மாடல்' நாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்து , வாய்ச் சவடால் வீரர்களாகத் திரியும் விடியா திமுக அரசின் ஆட்சியாளர்கள் , மக்களை வஞ்சிக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகிறார்கள்’ என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

  • வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, கழக அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் !

    - மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/sU5hNNaFC3

    — AIADMK (@AIADMKOfficial) July 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் ' இதுதொடர்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், சென்னையைப் பொறுத்தமட்டில் ஒருங்கிணைந்த சென்னை மாநகரிலும்; 25.07.2022 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் , மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மின்கட்டண உயர்வைக்கண்டித்து வரும் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் - அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.