சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 138-வது வார்டில் அதிமுகவினர் சிலர் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர் கண்டறிந்தனர்.
அப்போது எம்ஜிஆர் நகரில் உள்ள குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய தெருக்களில் சுற்றிய வாலிபர் ஒருவரைப் பிடித்து திமுகவினர் சோதனை செய்த போது
இரட்டை இலைச் சின்னம் பொறித்த டோக்கன்கள் இருந்தது. அதன் பின்புறத்தில் பார்கோடு இருந்தது. பார்கோடு ஸ்கேன் செய்து அதன் மூலம் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது தெரிந்தது. அந்த வாலிபர் கல்லூரி மாணவர் என்பது தெரிந்தது.
பார்கோடை ஸ்கேன் செய்தால் பணம்
தகவல் அறிந்து எம்ஜிஆர் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கல்லூரி மாணவரிடமிருந்து பணம், பார்கோடு டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.
பார்கோட்-ல் ஸ்கேன் செய்தால் வரும் எண்ணின் மூலம் டோக்கன் பயன்படுத்தப்பட்டு உள்ளதா இல்லையா என்பதைக் கண்காணிக்கும் வகையில் நூதன முறையில் அதிமுகவினர் விநியோகம் செய்துள்ளதாகக் கூறி திமுகவினர் குற்றம்சாட்டி உள்ளனர். பணம், ஒரு மாத மளிகை பொருட்கள், அரிசி போன்றவற்றை பார்கோடு டோக்கன் மூலம் வழங்கியதாக திமுகவினர் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல்துறையினர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:'திமுக கோவை கோட்டையை முற்றிலுமாக கைப்பற்றிவிட்டது!'