ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் விடியலுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் - ஓ.பி.எஸ். கண்டனம் - தங்கமகன் ஓபிஎஸ்

‘விடியலை நோக்கி’ என்ற தி.மு.க.வின் பிரசாரத்தை நம்பி ஆசிரியர்கள் வாக்களித்தனர்; ஆனால், ஆட்சிப்பொறுப்பெற்று 19 மாதங்கள் கடந்தும் விடியலுக்காக காத்திருக்கும் அவலத்திற்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் - மு.க.ஸ்டாலின்
ஓ.பி.எஸ் - மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Dec 4, 2022, 3:59 PM IST

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 177-ல், 2013ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு வேலை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச்சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

சட்ட வழிகளை எளிதாக்கிய மத்திய அரசு: இரண்டாவது வாக்குறுதியைப் பொறுத்தவரை, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்கால சான்றிதழாக மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. அதற்கான அறிவுரைகளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இதனால் ஆயுட்கால தகுதிச் சான்றிதழ் குறித்து சட்ட வழி வகைகளை ஆராயும் பணி தமிழ்நாடு அரசுக்கு இல்லாமல் போனது.

அதே சமயத்தில், முதல் வாக்குறுதியான ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த போதும் நிறைவேற்றப்படவில்லை.

  • "விடியலை நோக்கி" என்ற திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை நம்பி வாக்களித்த ஆசிரியர்களை, இன்று விடியலுக்காக காத்திருக்கும் அவல நிலைக்கு திமுக தள்ளியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது!

    தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய உரிய நடவடிக்கைகளை எடுத்திடுக! pic.twitter.com/8drBl0A7Us

    — O Panneerselvam (@OfficeOfOPS) December 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆசிரியர்கள் பக்கம் நின்ற ஸ்டாலின்: இதனை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி விட்டனர். மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்த வாக்குறுதியைக் கூட தி.மு.க அரசால் நிறைவேற்ற முடியவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் எதிர்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் இருந்தபோது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் தாமாக முன் வந்து ஆதரவு அளித்த மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.

19 மாதங்கள் தாண்டியும் விடியலுக்காக காத்திருப்பு: அதற்கேற்ப அந்த வாக்குறுதி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது. இவர்களின் வாக்குகளை எல்லாம் பெற்றுத்தான் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இன்றைக்கு அவர்களுடைய கோரிக்கையினை நிறைவேற்றும் இடத்தில் இருக்கிறார். ஆனால், இதுகுறித்து வாய் திறக்க மறுத்து வருகிறார்.

‘விடியலை நோக்கி’ என்ற தி.மு.க.வின் பிரசாரத்தை நம்பி ஆசிரியர்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தனர். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பெற்று 19 மாதங்கள் கடந்தும் விடியலுக்காக காத்துக் கொண்டிருக்கக்கூடிய அவல நிலைக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். “தனக்கு விடியல் கிடைத்துவிட்டது, இனி யார் எப்படி போனால் நமக்கென்ன” என்ற தன்னல மனப்பான்மை தலைவிரித்து ஆடுகிறதோ என்னவோ! இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

தேர்வில் வென்ற ஆசிரியர்களுக்கு பணி ஆணை: தற்போதைய கோரிக்கை, மறு நியமன போட்டித் தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்துவிட்டு, காலிப் பணியிடங்களை போட்டித்தேர்வின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வைத்து நிரப்ப வேண்டும் என்பது தான்.

இதில் கொள்கை முடிவு தான் எடுக்கப்பட வேண்டுமே தவிர, கூடுதல் நிதிச் சுமை ஏதும் அரசுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. மீண்டும் போட்டித் தேர்வு என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், போட்டித் தேர்வின்றி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'நாங்களும் பொன்னி நதி பார்த்துட்டோம்' மாற்றுத்திறனாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நெல்லை சார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.