ETV Bharat / state

அதிமுக அலுவலகத்தின் சாவி ஈபிஎஸ் கையில்..! என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்..?

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி வழக்கில் ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் அடுத்ததாக ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக அலுவலகத்தின் சாவி ஈபிஎஸ் கையில்..! என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்..?
அதிமுக அலுவலகத்தின் சாவி ஈபிஎஸ் கையில்..! என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்..?
author img

By

Published : Sep 13, 2022, 11:11 AM IST

சென்னை: அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தால் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

பின்னர் அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், எப்படி அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவிக்கு உரிமை கோர முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்வது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அதிமுகவின் உறுப்பினர்களே இல்லாதவர்கள் வழக்கு தொடுத்துள்ளார் என இபிஎஸ் தரப்பின் வாதத்தை ஏற்று தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

அதிமுக தொடர்பாக நேற்று வந்த இரண்டு வழக்கிலும் ஈபிஸ்க்கு சாதகமாகவே வந்துள்ளது. இதனால் அவர் அடுத்த கட்டமாக இடைக்கால பொதுச் செயலாளரில் இருந்து பொதுச்செயலாளராக ஆகக்கூடிய பணிகளை மேற்கொண்டுள்ளார். அதிமுக அலுவலக சாவி வழக்கு முடிவு ஓபிஎஸ் தரப்பினருக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி நேற்று உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

ஓபிஎஸ் தரப்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முடிவு ஓபிஎஸ்க்கு சாதகமாக வரும் பட்சத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பாளராக முழுமையாக செயல்படலாம்.

இதற்காக தற்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கக்கூடிய மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரணைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஓபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனுவானது ஓபிஎஸ் தரப்பிற்கு ஒரு இறுதி வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி,சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.