ETV Bharat / state

ADMK: சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்னை குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை - ஒற்றை தலைமை

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADMK: சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்சனை குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை

author img

By

Published : Jan 9, 2023, 11:04 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்று(ஜன.9) தொடங்கி ஜன.13ஆம் தேதி சட்டப்பேரவை நடைபெற உள்ளது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கடந்த சட்டப்பேரவையை புறக்கணித்த ஈபிஎஸ், இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஓபிஎஸ் அருகே அமர்ந்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது பாதியில் ஆளுநர் ரவி பேரவையை விட்டு வெளியேறினார். இதனைத்தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவை முடிவடைந்தது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக, சட்டம் ஒழுங்கு பிரச்னை, சமீபத்தில் நடைபெற்ற பெண் காவலர் மீதான தாக்குதல் போன்ற பல விவகாரங்களை சட்டப்பேரவையில் எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதம் 1000 ரூபாய் பல பேருக்கு நிறுத்தம் செய்துள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதியில் கூறிய பல திட்டங்களை இன்னும் செயல்படுத்தவில்லை எனவும் இது குறித்தும் கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரம்பை மீறினாரா ஆளுநர்..? - சட்ட வல்லுநரின் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.