ETV Bharat / state

சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் யார்? - அதிமுக ஆலோசனை! - அதிமுக ஆலோசனை

சென்னை: அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு தலைவர் யார் என்பது குறித்து இன்று (மே.10) நடைபெறும் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்
எதிர்க்கட்சி தலைவர்
author img

By

Published : May 10, 2021, 10:58 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்த நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படவிருக்கிறது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுகவின் சார்பில் போட்டியிட்டவர்களில் 65 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணி கட்சிசார்பில்,10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியே அமர வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கவும் ஆதரவு பெருகி வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) கூட்டம் கடந்த 7ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மூன்று மணிநேரம் தாமதமாகவே கூட்டம் தொடங்கியது.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் 10ஆம் தேதி காலை ஒன்பது முப்பது மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல் துறையின் சிறப்பு அனுமதி பெற்று அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவராக தனக்கு பதவி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். இதைப் போலவே எடப்பாடி பழனிசாமியும் தனக்கு பதவி வழங்க வேண்டும் என கேட்பதால் கடும் போட்டி நிலவி வருகிறது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி யாருக்கு அளிப்பது என்பதிலும்?, அதிமுக அவைத் தலைவர் யார் என்பதிலும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்திற்கு வந்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

இந்தநிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் தேர்வு 12ஆம் தேதி நடைபெறுகிறது. சட்டப்பேரவை சபாநாயகரை முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இணைந்து இருக்கையில் அமர வைப்பது மரபாகும். இதனால் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை விரைந்து முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.