ETV Bharat / state

பள்ளிக்கல்வித்துறையின் திட்ட செயல்பாட்டில் இரட்டை இலை லோகோ - தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி - Tamil Nadu Teacher Alliance

பள்ளிக்கல்வித்துறையின் சூழ்நிலையியல் பாட செயல்பாட்டின் லோகோவாக உள்ள ஓவியத்தில் இரட்டை இலை இருப்பது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையின் திட்ட செயல்பாட்டில் இரட்டை இலை லோகோ - தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி

author img

By

Published : Oct 16, 2022, 11:35 AM IST

சென்னை: இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகியும், ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளருமான அண்ணாமலை கூறியதாவது, “தமிழ்நாடு முழுவதும் எண்ணும் எழுத்தும் பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த பயிற்சி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உரியதாக இருந்தாலும், 4 மற்றும் 5ஆம் வகுப்பு பாடம் நடத்தக் கூடிய ஆசிரியர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

படங்களை காட்டி மட்டும் பாடத்தை நடத்துவதைத் தவிர்த்து கொண்டு பாடநூலினை வைத்து பாடம் நடத்த வேண்டும். எழுத்துப் பயிற்சி அளிக்க வேண்டும். கரும்பலகை பயன்பாடு இருக்க வேண்டும். வாசிப்பு பயிற்சி இருக்க வேண்டும் என்பது போன்ற மாற்றங்களை எல்லாம் செய்ய வேண்டும்.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகியும், ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளருமான அண்ணாமலை பேட்டி

எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு பாடநூல் பயிற்சி நூல் ஒருங்கிணைப்பு, கீழ்மட்டக் கரும்பலகை செயல்பாடு, செய்தித்தாள் செயல்பாடு, சூழ்நிலையியல் பாட செயல்பாடு ஆகிய செயல்பாடுகளுக்கு லட்சினைகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். இவற்றில் சூழ்நிலையியல் பாட செயல்பாடு லட்சினையாக (லோகோ) ஓவியத்தின் தலையில் இரட்டை இலையினை தத்ரூபமாக வெளியிட்டிருக்கின்றனர்.

அந்த தலையின் இரண்டு பக்கமும் இரண்டு இலைகளை வைத்துள்ளனர். இதனை எந்த அலுவலருமே பார்க்கவில்லையா? அல்லது திட்டமிட்டே வெளியிட்டு இருக்கிறார்களா? என்ற ஐயம் மேலிடுகிறது. ஒரு கட்சியினுடைய சின்னத்தையே தங்கள் தலைமையில் உள்ள அரசு மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்துகிற தைரியம் அலுவலர்களுக்கு வந்திருக்கிறது.

அலுவலர்கள் எதைச் செய்தாலும் நாம் கண்டு கொள்ளமாட்டோம் என்ற நம்பிக்கையினை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறோம். பள்ளிக்கல்வித்துறை லோகோவில் ஒரு கட்சியின் சின்னம் இருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டதேன்? சூழ்நிலையியல் பாடப் புத்தகச் சின்னத்தில் உள்ள வண்ணத்தினை உற்றுப் பார்த்தால் காவியாகவும் தெரிகிறது, சிவப்பாகவும் கலந்து தெரிகிறது. ஏன் இந்த குழப்பமான நிலையினை தேர்ந்தெடுத்தார்கள்? வேறு வண்ணங்களே கிடைக்கவில்லையா?” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கல்லூரி போகாத மாணவர்களின் எண்ணிக்கை தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.