சென்னை: அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில்அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய ஈபிஎஸ், ‘அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்’ என தெரிவித்தார்.
மேலும் அதிமுகவில் பொருளாளருக்கான பொறுப்புகள் குறைக்கப்பட்டு, பொதுச்செயலாளருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டது. அதில், ‘இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி கையெழுத்திடும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உண்டு.
வங்கி நடவடிக்கைகள், கடன் விவகாரம் ஆகியவற்றில் ஈடுபட பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உண்டு’ என விதி 20 அ பிரிவு11 ல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுக்குழுவில் நடந்தது என்ன? - ஓபிஎஸ் நீக்கத்தை முன்மொழிந்த கே.பி.முனுசாமி