ETV Bharat / state

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை - AIADMK general secretary

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை
author img

By

Published : Sep 30, 2022, 12:52 PM IST

Updated : Sep 30, 2022, 2:20 PM IST

கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடரும்’ என உத்தரவிட்டார்.

தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று (செப் 30) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளபோது தேர்தலுக்கு என்ன அவசரம்?” எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர் தசரா விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும் என வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Last Updated : Sep 30, 2022, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.