ETV Bharat / state

ஆ. ராசா மீது அதிமுக புகார் மனு!

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

author img

By

Published : Dec 8, 2020, 3:02 PM IST

a.rasa mp
a.rasa mp

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச்செயலாளர் திருமாறன், "இரண்டு நாள்களுக்கு முன்னர் மக்களவை உறுப்பினர் ஆ. ராசா செய்தியாளர்கள் பேட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிடாத தவறான செய்தியை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான சொற்களை பயன்படுத்தி ஜெயலலிதாவை இழிவாக பேசியுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமியை ஒருமையிலும், ஒழுக்கமற்ற வகையிலும் உண்மை இல்லாத தகவலையும் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இதனால் ஆ.ராசா மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த புகார் மனுவை நாங்கள் அளித்துள்ளோம்.

அந்த மனுவில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு அளித்துள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருப்பதை தவறாக மற்றும் பொய் தகவலை பரப்புவது, பெண்களை இழிவாக பேசுவது, தமிழ்நாடு முதலமைச்சரை தரைக்குறைவாக பேசுவது ஆகிய மூன்று காரணங்களுக்காக ஆ ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு பூட்டு: காங்கிரஸார் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.