ETV Bharat / state

கூட்டணி! இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு அதிகாரம் - அதிமுக செயற்குழு கூட்டம்

AIADMK Executive Committee meeting
இபிஎஸ் - ஓபிஎஸ்
author img

By

Published : Jan 9, 2021, 11:28 AM IST

Updated : Jan 9, 2021, 1:42 PM IST

11:24 January 09

சென்னை:முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் கூட்டணி குறித்து இறுதி செய்ய அதிகாரம் உண்டு உள்ளிட்ட 16 தீர்மானங்கள் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சென்னை வானகரத்தில் உள்ள பிரபல தனியார் மண்டபத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது.

இந்நிகழ்வில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ளனர். வந்திருந்த அனைவருக்கும் அதிமுக தொண்டர்கள் வழிநெடுக நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். 

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  1. ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைத்து வரும் தமிழ்நாடு அரசை பாராட்டி தீர்மானம்
  2. அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதை பொதுக்குழு ஏற்கிறது
  3. தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி
  4. கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு குறித்த முடிவெடுக்க ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் உண்டு
  5. இலங்கையில் மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
  6. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20விழுக்காடு முன்னுரிமை எனும் நெறிமுறையை முறைப்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
  7. உலக முதலீட்டாளர் மாநாடு நடத்திய தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
  8. தமிழ்நாடு முழுவதும் 2ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைத்த மாநில அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
  9. நகர்புற வீட்டு வசதித் திட்டத்தில் தமிழ்நாட்டையும் சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
  10. தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்று இருப்பதற்கு பாராட்டு
  11. நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
  12. பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்கும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
  13. நாடு தழுவிய அளவில் சிறந்த நிர்வாகம் கொண்ட  மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
  14. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
  15. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்
  16. தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தின் ஏக போக, வாரிசு அரசியலை வீழ்த்துவது என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுவது குழு அமைக்கப்பட்ட நிலையில், அக்குழுவிற்கு ஒப்புதல் மற்றும் அதிகாரம் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:சாலைகளில் கலைநிகழ்ச்சி மேடைகள்: அதிமுகவினரால் அவதியுறும் சென்னைவாசிகள்!

Last Updated : Jan 9, 2021, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.