சென்னை: தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சேலம் நவல்பட்டு பகுதியில் உள்ள அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது. இதற்கு 1,842 மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என யாரும் நியமிக்கப்படவில்லை.
பெயரளவில் தொடங்கப்பட்ட அம்மா கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை. அதே சமயம் வீடு தேடி மருத்துவம் என்ற திட்டம் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் மக்களுக்காக திட்டங்கள் தொடங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் பெயரை வைப்பதற்காகவே திட்டங்கள் தொடங்கப்பட்டன.
அம்மா உணவகத்தில் உள்ள பணியாளர்களை வேலையை விட்டு எடுப்பதாக கூறும் தகவல் அப்பட்டமானது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல ஓபிஎஸ் எதையோ பார்த்து பயந்து விட்டார். இந்த ஆட்சியின் சாதனைகள் பார்த்து மிரண்டு விட்டார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒமைக்ரான்: 'விமான பயணிகள் தவறான தகவல் அளித்தால் கடும் நடவடிக்கை'