சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்த அதிமுக துணை கொறடா ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் நினைவூட்டல் கடித்தை நேற்று (அக்.14) அளித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்தது குறித்து ஏற்கனவே சபாநாயகரிடம் மனு கொடுத்திருந்தோம்.
அந்த கடிதம் பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த கடிதத்தின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் நினைவூட்டல் கடிதம் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் நேரடி அரசியலுக்கு வந்த பின் கட்சி வளர்ச்சியடைந்துள்ளது - துரை வைகோ