ETV Bharat / state

அதிமுக கூட்டணி தோல்வி தற்காலிகமானது: ஜி.கே.வாசன் - அதிமுக கூட்டணி தோல்வி தற்காலிமானது

அதிமுக கூட்டணி தோல்வி தற்காலிகமானது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்
author img

By

Published : Feb 23, 2022, 7:32 PM IST

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆவது வார்டில் கீதா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று (பிப்.23) சென்னை விமான நிலையம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து சான்றிதழ் கொடுத்து வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. திமுக வெற்றிக்கு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இட பங்கீடு ஒருபுறம் இருந்தாலும், ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றால் தான் வெற்றி பெற முடிந்தது.

கணிசமான இடங்களில் வெற்றி

தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளை மீறிய கட்சியாகவே ஆளும் கட்சி கூட்டணி செயல்பட்டது. அதிமுக கூட்டணியில் த.மா.கா.விற்கு குறைவான இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும் கூட கணிசமான இடங்களில் வெற்றி பெற்று உள்ளோம். கூட்டணி தர்மத்தை கைப்பிடிக்கும் கட்சியாகவே த.மா.கா. செயல்பட்டு உள்ளது.

அதிமுக, த.மா.கா. கூட்டணி தோல்வி தற்காலிகமானதே. அதிமுக, த.மா.கா. கூட்டணியில் வெற்றி பெற்றவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி. அதிமுக, த.மா.கா. கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் உள்ளாட்சியில் நல்லாட்சியை ஏற்படுத்த கூடிய நிலையில் பணியாற்றுவார்கள். மக்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள்.

ஜெயக்குமார் கைது

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டிக்கத்தக்கது. தேர்தலில் அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது திமுக எந்த நடவடிக்கையும் முறையாக எடுக்காமல், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குறி வைத்து கைது செய்ததை மக்கள் விரும்பவில்லை. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: திருச்சி மேயர் யாரு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.