குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு சுமார் 29 இஸ்லாமியர்கள் மத பரப்புரை செய்வதற்காக கடந்த 9ஆம் தேதி வந்தனர். பின்னர் இவர்கள் பெரியமேடு, புரசைவாக்கம், கொளத்தூர், தேனாம்பேட்டை ஆகிய மசூதிகளில் தங்கி பரப்புரை செய்துள்ளனர். மேலும் சென்னை சூளை சட்டண்ணன் தெருவில் உள்ள மசூதியில் தங்கி பரப்புரையில் ஈடுப்பட்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் வெளியூரிலிருந்து வந்து இஸ்லாமியர்கள் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கும் சுகாதாரத் துறையினருக்கும் தகவல் கிடைத்துது.
இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கிருந்த 29 நபர்களை அழைத்து சென்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அதில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அந்த மசூதியில் தங்கியிருந்த மேலாளர் உட்பட 39 நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க...கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!