ETV Bharat / state

'தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு' - அமைச்சர் தங்கமணி

சென்னை: நடப்பாண்டில் தட்கல் (விரைவு) உள்ளிட்ட முறைகளின் மூலம் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Agricultural electricity connection in Tatkal system said Minister Thangamani

author img

By

Published : Sep 17, 2020, 4:25 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி இன்று (செப் 17) மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் விவசாய மின் இணைப்பு வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, நடப்பாண்டில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான கீழ்காணும் அறிவிப்பினை அமைச்சர் தங்கமணி வெளியிட்டார்.

விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்போர் பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெரும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கும் திட்டம் இந்த ஆண்டும் சட்டப்பேரவையில் அறிவித்தபடி நடைமுறைப்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஐந்து குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய், 7.5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு இரண்டு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய், 10 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு மூன்று லட்சம் மற்றும் 15 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு நான்கு லட்சம் வீதம், ஒரு முறை கட்டணம் செலுத்தும் 25 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களுடைய பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி 21.09.2020 முதல் 31.10.2020 வரை தொகையை செலுத்தி தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

31.10.2020 வரை பதிவு செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களும் இத்திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும். இதுதவிர, சாதாரண வரிசை முன்னுரிமையில் 31.03.2003 வரை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்படும்.

மேலும், சாதாரண வரிசை முன்னுரிமையில் 01.04.2003 முதல் 31.03.2004 வரை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 1000 விண்ணப்பங்களுக்கு திருத்தப்பட்ட சுயநிதி திட்டம் ரூ.10,000த்தின் கீழ் இலவச விவசாய மின் இணைப்புகள் என மொத்தம் 25 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புக்கு சாதாரண வரிசை மற்றும் திருத்தப்பட்ட சுயநிதி திட்டங்களின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தபடி நடப்பாண்டில் வழங்கப்படும்.

ஆக, நடப்பாண்டில் (2020-21) விவசாயிகளின் நலன் கருதி 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.