ETV Bharat / state

விண்ணில் பாய தயாராகும் அக்னிகுல்..! 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரான ராக்கெட் எஞ்சின் - இஸ்ரோ

சென்னை ஐஐடியின் அக்னிகுல் ராக்கெட்டின் எஞ்சின் முதல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது எனவும், அது முடிந்த பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

The Agnikul rocket made with 3D printing technology is undergoing tests to be ready for launch
விண்ணில் பாய தயராகும் அக்னிகுல்..! 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரான ராக்கெட் எஞ்சின்
author img

By

Published : Feb 23, 2023, 10:48 PM IST

விண்ணில் பாய தயராகும் அக்னிகுல்..! 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரான ராக்கெட் எஞ்சின்

சென்னை: ஐஐடி மாணவர்களின் அக்னிகுல் ஸ்டார்ட் அப் நிறுவனம் அக்னிபான் என்னும் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த ராக்கெட்டின் எஞ்சின் முழுவதும் 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்டதாகும். நம்நாட்டில் தற்போது இஸ்ரோவின் ராக்கெட்டுகள் மூலம் பெரிய அளவிலான சாட்டிலைட்டுக்கள் மட்டும் விண்ணில் ஏவப்படுகின்றன. ஆனால் அக்னிபான் ராக்கெட் மூலம் சிறிய அளவிலான சாட்டிலைட்டுகளை விண்ணில் செலுத்த முடியும்.

அக்னிபான் ராக்கெட் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை ஏவி, விண்ணில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் கீழ் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்த முடியும். இதனால் விண்வெளி துறையில் எதிர்காலத்தில் எளிதில் குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை ஏவ முடியும்.

இஸ்ரோவில் தனியார் நிறுவனத்திற்காக முதன்முதலில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ராக்கெட் எஞ்சின் 3 டி பிரிண்டிங் முறையில் செய்யப்படுவதால் செலவு குறைவாக இருப்பதுடன், வேகமாகவும் செய்ய முடியும். ராக்கெட்டின் 2 பாகங்களில் 2 வது பாகம் தயார் செய்யப்பட்டு பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் 3 டி பிரிண்டிங் முறையில் தயார் செய்யப்பட்டு, தற்பொழுது தையூர் வளாகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “சென்னை ஐஐடியால் தயார் செய்யப்பட்ட அக்னிகுல் ராக்கெட் விண்வெளி வரையில் செல்லாமல் ஆகாயத்திற்குள்ளேயே குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்குவதற்குத் தயார் செய்து வருகிறோம். அதற்கான பரிசோதனைகளைச் செய்துள்ளோம். அடுத்ததாக ஸ்டேஜ் டெஸ்ட் செய்வதற்கு தயார் செய்து வருகிறோம்.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் விண்ணில் ஏவுவதை போல் தையூரில் உள்ள வளாகத்தில் பரிசோதனைச் செய்யப்பட்டு, ஏவப்படும். அதன் பின்னர் ஸ்டேஜ் டெஸ்ட் முடித்து விட்டால் இஸ்ரோவில் இருந்து ஏவுவதற்கு அனுமதி அளித்து விடுவார்கள். அதன் பின்னர் ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்த முடியும்.

தையூர் வளாகத்தில் ஸ்டேஜ் டெஸ்ட், இயந்திர பரிசோதனை செய்துக் கொண்டு வருகிறோம். ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்துத் தான் ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளோம். அதற்காக தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் எடுத்துக்கொண்டு செல்லும் எடையின் அடிப்படையில் தான் அதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வோம். அக்னிகுல் மூலம் செயற்கைக்கோள் ஏவுவதற்கான செலவு மிகவும் குறைவாக இருக்கும். அடுத்தக்கட்டமாக முதலில் சப் ஆர்பிட்டல் லாஞ்ஜ் முடித்து விட்டால், அடுத்ததாக ஆர்பிட்டல் லாஞ்ஜ் நேரடியாக விண்வெளிக்கு செயற்கைக்கோள் செலுத்தப்படும்.

விண்வெளிக்கு நாம் ஒரு முறை சென்று விட்டால், அடுத்தடுத்து எவ்வளவு வேகமாக செய்யலாம் என்பதை பார்ப்போம். சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி பூங்காவில் உள்ள ராக்கெட் தொழிற்சாலையில் 3 டி பிரிண்ட்டிங் முறையில் ராக்கெட் தயார் செய்ய உள்ளோம். 3 டி பிரிண்ட்டிங் முறையில் 3 நாட்களுக்குள் 4 முதல் 5 எஞ்ஜின் உற்பத்தி செய்ய முடியும். அவ்வாறு தயார் செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்குள் ஒரு ராக்கெட் உற்பத்தி செய்து பொருத்தி விட்டால், 2 வாரத்திற்கு ஒரு ராக்கெட் விண்ணில் செலுத்த முடியும். அந்த நிலையை நாம் அடைந்து விட்டால், விலையை குறைக்கவும் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

சென்னை ஐஐடியால் தயார் செய்யப்பட்டுள்ள அக்னிகுல் ராக்கெட் இந்த ஆண்டின் இறுதிக்குள் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அக்னிகுல் ராக்கெட் 2 நிலைகளை கொண்டது. முதல் மற்றும் 2ம் நிலையை கொண்டுள்ளது. இதனை தயார் செய்ய 3 டி பிரிண்ட்டிங் இயந்திரம் வைத்துள்ளோம்.

முதல்நிலையில் 4 முதல் 7 எஞ்சின்கள் பொருத்தலாம். நிலை ஒன்றில் எத்தனை இயந்திரத்தை பொறுத்த வேண்டும் என்பதை எவ்வளவு எடையில் செயற்கைக்கொள் கொண்டு செல்கிறோம் என்பதை பொறுத்து மாறுபடும். 2 ம் நிலையிலும் 3 டி பிரிண்ட்டிங் முறையில் உருவாக்கப்பட்ட எஞ்சின் தான் உள்ளது. இந்த எஞ்சின் செயற்கைக்கோள்களை மேலே எடுத்து செல்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

சென்னை ஐஐடியின் அக்னிகுல் நிறுவனத்தின் ராக்கெட்டில் 2 ம்நிலை இயந்திரம் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது முதல்நிலை எந்திரத்தின் சோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னர் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கு தயாராகி விடுவோம். இந்த இயந்திரத்தில் திரவ ஆக்ஜிஜன், விமானத்திற்கு பயன்படுத்தபடும் கிரோசின் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார். அக்னிகுல் நிலை 2 எஞ்சினில் 1000 பாகங்கள் பொருத்த வேண்டிய இடத்தில், 3 டி பிரிண்ட்டிங் முறையில் உருவாக்கப்பட்டதால் ஒரே பாகமாக செய்யப்பட்டுள்ளது. இதனால் எஞ்சினை பொருத்தும் நேரம் குறையும்.

இதையும் படிங்க: 'என் மனைவியை பார்த்த பின்புதான் என் வாழ்வில் அடையாத உயரத்தை அடைந்திருக்கிறேன்'- மணமகன் நெகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.