ETV Bharat / state

'அக்னிபத்' இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் ஒரு திட்டம் - அஸ்ஸாம் காங்கிரஸ் எம்.பி., கௌரவ் கோகாய்

ஒன்றிய அரசால் தற்போது கொண்டுவரத் திட்டமிட்டுள்ள அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் திட்டமென காங்கிரஸ் தேர்தல் அலுவலரும் மக்களவை உறுப்பினருமான கௌரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.

’அக்னிபாத்’ இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் ஒரு திட்டம் -  கௌரவ் கோகாய்

author img

By

Published : Jun 26, 2022, 9:13 PM IST

சென்னை: 'அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்குத் துரோகம் விளைவிக்கும் ஒரு திட்டமாகும். திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலும் போராட்டம் நடத்த இருக்கிறோம்' என தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அலுவலரும் மக்களவை உறுப்பினருமான கௌரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " 'அக்னிபத்' திட்டம் இளைஞர்களுக்குத் துரோகம் விளைவிக்கும் ஒரு திட்டமாகும். இது பிரதமர் மோடியின் கர்வத்தால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். அக்னிபத் திட்டத்தினால் இந்தியா முழுவதும் பல போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால், பிரதமர் மோடி இதுவரைக்கும் அதைப் பற்றி வாய் திறக்காமல் உள்ளார்.

இதே கர்வத்துடன் பணமதிப்பிழப்பு பிரச்னை மற்றும் விவசாய சட்டத்தை விவசாயிகள் ரத்து செய்ய போராடிய பொழுதும் இருந்தார். தற்போது ஆட்சி செய்யும் மோடி அரசாங்கம் ராணுவத்தை வைத்து காசை மிச்சப்படுத்த நினைக்கிறது.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எல்லைகளில் நம்மை சுற்றி உலாவிக் கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது, ராணுவ வீரர்களுக்கு அதிகமான பயிற்சி, ஆயுதங்கள், பாதுகாப்புக் கவசங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும். ஆனால், மோடி அரசாங்கம் அதைத் தவிர்த்து காசை மிச்சப்படுத்தி அதற்காக இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இதனால் நம் நாடு பெரும் ஆபத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

யாரிடமும் கருத்துக்கேட்காமல் மோடி அரசாங்கம் இத்திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. ’அக்னிபத்’ திட்டம் முடிந்து ராணுவத்தில் சேர முடியாமல் மீண்டும் சொந்தக் கிராமத்துக்கு செல்லும் இளைஞர்களின் மனநிலை மிக மோசமாக இருக்கும். இது அவர்களின் உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கும்.

காங்கிரஸ் ஆட்சியின்போது இதேபோன்று தற்காலிகமாக ராணுவ அலுவலர்களை நியமிக்கும் திட்டமிருந்தது. ஆனால் நிரந்தர ராணுவ வீரர்களை பணியமர்த்தும் திட்டமும் இருந்தது. ஆனால், தற்போது தற்காலிக ராணுவ வீரர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுகின்றனர். நிரந்தர ராணுவ வீரர்கள் திட்டத்தை அடியோடு இல்லாமல் செய்கின்றனர்.

பொதுவாக ராணுவத்தில் பயிற்சி பெற்று முன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகும். ஆனால், தற்போது வெறும் 6 மாதங்கள் மட்டுமே பயிற்சி அளிக்கின்றனர். இதனால் நாட்டுக்கு மிகவும் ஆபத்து.
எனவே, இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக நாளை(ஜூன் 27) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையைப் பொறுத்தவரை சென்னையில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலகத்தமிழர்கள் 'மாமனிதன்' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட வேண்டும் - இயக்குநர் பாரதிராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.