ETV Bharat / state

அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்த முகவர் கைது

author img

By

Published : Aug 12, 2022, 5:06 PM IST

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனம் 6,000 கோடி ரூபாய் வசூல் செய்த விவகாரத்தில் அதன் முகவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்த முகவர் கைது
அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்த முகவர் கைது

சென்னை: இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8,000 ரூபாய் தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் அடிப்படையிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்திற்கு தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தியதில் ஒரு லட்சம் பேர் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. மொத்தமாக 6,000 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், வேத நாராயணன், பக்தவச்சலம், கஜேந்திரன், விவேக் ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸ் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 27 கோடி ரூபாய் சொத்துக்கள் அடையாளம் கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் முகவராக செயல்பட்ட நபர் ஒருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மின்மினி சரவணகுமார் இண்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ய காரணமாக இருந்ததாக தெரிவித்திருந்தார்.

வழக்கு தொடர்ந்து புகார் அளித்த தன்னிடமே போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்துவதாகவும் காஞ்சிபுரத்தில் உள்ள தனது சொத்துக்களை சீல் வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். சரவணகுமார் மார்க் என்ற நிறுவனத்தை நடத்த உதவியதாகவும் அதன் மூலம் தன் நண்பர்கள் உறவினர்கள் என பலரிடம் பணம் வசூலித்து இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்திடம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

தானும் இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த சரவணக்குமாரை சம்மன் அனுப்பி விசாரணை நடத்திக் கொண்டு இருந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இந்த நிறுவனத்திற்கு ஏஜெண்டாக செயல்பட்டு ஆயிரக் கணக்கான பேரிடம் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தது தொடர்பாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மின்மினி சரவணன் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை விசாரணைக்காக சென்ற சரவணகுமார் மீது ஆட்கொணர்வு மனு உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்ச்சைக்குரிய புத்தகங்கள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.