சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை அந்தந்த மாவட்டங்களில் தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் நடைபெறவுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பரப்புரை செய்ய இருப்பதாக கமல் ஹாசன் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் வரும் 25ஆம் தேதிக்குப் பின், நேரடி பரப்புரையை கமல் ஹாசன் தொடங்க இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு, வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும், பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் வழங்குவதோடு, மநீம கட்சி செய்ய உள்ள பணிகள் தொடர்பாக மக்களிடம் பரப்புரை செய்ய கமல் ஹாசன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்'