ETV Bharat / state

18 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் ரஜினி, கமல் படங்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Alavantha vs Muthu Re Release: 18 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரின் ஆளவந்தான் மற்றும் முத்து படங்கள் நாளை ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி, கமல்
18 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் ரஜினி, கமல் படங்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 3:33 PM IST

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள். இவர்கள் இருவரும், முதன் முறையாக அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். முன்னதாக இவர்கள் இருவரின் படமும் பல முறை ஒரே நாளில் வெளியாவது வழக்கம்.

இரண்டு முன்னனி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் பொழுது, தனக்கு பிடித்த நடிகரின் பலத்தை காட்டுவதற்காக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு படங்களை கொண்டாடுவார்கள். அந்த வகையில்,
1978 ஆம் ஆண்டு தீபாவளிக்கு, ரஜினி நடித்த தப்புத் தாளங்கள், தாய் மீது சத்தியம் மற்றும் கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா மற்றும் இருவரும் இணைந்து நடித்த அவள் அப்படித்தான் ஆகிய மூன்று படங்களிம் ஒரே நாளில் வெளியானது.

இதனையடுத்து, 1987 ஆம் ஆண்டு தீபாவளிக்கு, சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகனின் மனிதன் மற்றும் நாயகன் படங்களும், 1991 ஆம் ஆண்டு தளபதி மற்றும் குணா படங்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. அதன் பின்னர், இறுதியாக 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ஒரு நாள் முன், பின் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுக்கு பிறகு, இவர்கள் இருவரின் படங்களும் ஒன்றாக வெளிவரவில்லை.

இந்நிலையில், தற்போது தமிழ் திரையுலகில் புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாகியுள்ளது. பிரபல நடிகர்களின் பிறந்தநாள் மற்றும் படத்தின் ஆண்டு விழா நாட்களில், அவர்களது வெற்றிப் படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதால் திரையரங்குகளின் உரிமையாளர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் கடந்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து, கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆளவந்தான் திரைப்படம்
நாளை டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளது.

இப்படம் நாளை உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகிறது. அதேபோல், கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து, தமிழில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம், ஜப்பானில் 1998 ஆம் ஆண்டு வெளியானது. ஜப்பானில் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்த நிலையில், அவற்றை கொண்டாடும் விதமாக நாளை இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரது படங்களும் ஒன்றாக வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரு வாரத்திற்குப் பிறகு கடலுக்குச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்த இலங்கை ராணுவத்தினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.