சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில், நாளை ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிக்கு இடைய 22-ஆவது உலகக் கோப்பை லீக் போட்டி நடைபெறுகிறது. இதற்காக நாளை (அக்.23) மட்டும் மெட்ரோ ரயில் சேவையானது நீடிக்கபட்டுள்ளாதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (அக்.23) நடைபெறவுள்ளது. இதற்காக, சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பயண போக்குவரத்து செலவினத் தொகையைத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்றுள்ளது. என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Additional Passenger Special Train Service for
— Southern Railway (@GMSRailway) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ICC – MEN’s CRICKET WORLD CUP 2023
Velachery – Chintadripet – Velachery passenger special train will run on 08th, 13th, 18th, 23rd & 27th October 2023 for 5 days#southernrailway #specialtrains pic.twitter.com/ojgDpfd9sm
">Additional Passenger Special Train Service for
— Southern Railway (@GMSRailway) October 7, 2023
ICC – MEN’s CRICKET WORLD CUP 2023
Velachery – Chintadripet – Velachery passenger special train will run on 08th, 13th, 18th, 23rd & 27th October 2023 for 5 days#southernrailway #specialtrains pic.twitter.com/ojgDpfd9smAdditional Passenger Special Train Service for
— Southern Railway (@GMSRailway) October 7, 2023
ICC – MEN’s CRICKET WORLD CUP 2023
Velachery – Chintadripet – Velachery passenger special train will run on 08th, 13th, 18th, 23rd & 27th October 2023 for 5 days#southernrailway #specialtrains pic.twitter.com/ojgDpfd9sm
இதையும் படிங்க: India Vs New Zealand : நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்!
நாளை நடைபெறும், போட்டியை பாா்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை வழக்கத்தைவிடக் கூடுதலாக ஒரு மணி நேரம் இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலைக்கு இரவு 11 முதல் 12 மணி வரை 15 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படாது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வாயிலில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் போட்டிக்கான டிக்கெட்டில் உள்ள பாா்கோடு இன்றியமையாதது. அதனால், டிக்கெட்டை சேதம் அடையாமல் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். இதில், போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி எவ்வித கட்டணமும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.” என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மூன்றாவது நாளில் முன்னேற்றம் அடைந்த லியோ வசூல் - உலகம் முழுவதும் ரூ.200 கோடியைக் கடந்தது!
நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை: பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம்,
மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி ரயில்கள் இயக்கப்படும்.
பச்சை வழித்தடம்: எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி - பாலஸ்தீனத்துக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள்!