எட்டு ஆண்டுகளில் பண வீக்கம், 60 சதவீதம் உயர்ந்துள்ளதைக் கணக்கிட்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு கட்ட, கட்டிய வீட்டை வாங்க, அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, முன் பணத்தொகை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதர மாநில அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட, கட்டிய வீட்டை வாங்க, அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதற்கு வழங்கப்பட்ட கடன் தொகை 15 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர், தற்போது இந்த முன்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.