ETV Bharat / state

கூட்டணி குறித்து கருத்து கூற தடை விதித்த அதிமுக! - OPS, EPS on alliance

சென்னை: அதிமுகவினர் தனிப்பட்ட முறையில் கூட்டணி குறித்து கருத்து கூற கட்சி தலைமை தடை விதித்துள்ளது.

ADMK
ADMK
author img

By

Published : Jan 12, 2020, 11:57 PM IST

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் முதல் கூட்டணி அமைத்து போட்டியிட்டுவருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் கூட்டணியினரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தாலும் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் அதிமுகவினர் கூறும் கருத்துகள் கூட்டணியில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனை தவிர்க்கும் வகையில் அக்கட்சியினர் கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கூட்டணி வியூகங்களைக் குறித்து கட்சித் தலைமை மட்டுமே முடிவெடுக்கும். அதிமுகவினர் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது.

அதிமுக அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து அதிமுகவைச் சேர்ந்த சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மிகுந்த கட்டுப்பாடும், ஒழுங்கும், ஜனநாயகப் பண்பும் நிறைந்த அதிமுகவின் தற்போதைய கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தீர ஆராய்ந்து, கட்சியின் கொள்கை கோட்பாடுகளின்படி முடிவெடுப்பார்கள். ஜெயலலிதா காட்டிய வழிகளில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளைப் பற்றிய தனிநபர்களின் விமர்சனங்களும் கருத்துக்களும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி அதிமுகவிற்கு ஊறு விளைவிக்கும் என்பதால் அத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று அதிமுகவினரை கண்டிப்புடன் நெறிப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

மக்கள் நலப் பணிகளை திறம்பட ஆற்றி கழகத்திற்கு பெருமை சேர்க்கும் வேலைகளில் மட்டுமே அதிமுகவினர் இப்போது ஈடுபட வேண்டும். கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருவிழா தகராறு: ஆட்சியர் முகாமை முற்றுகையிட்ட மக்கள்!

Intro:கூட்டணி குறித்து அதிமுகவினர் தனிப்பட்ட முறையில் கருத்து கூற தடை
Body:கூட்டணி குறித்து அதிமுகவினர் தனிப்பட்ட முறையில் கருத்து கூற தடை

சென்னை,

அதிமுகவினர் தனிப்பட்ட முறையில் கூட்டணி குறித்து கருத்து கூற தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக,பாஜக,பா.ம.க.,தேமுதிக ஆகிய கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் முதல் கூட்டணி நிலவுகிறது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் கூட்டணியினரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தாலும் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் அதிமுகவினர் கூறும் கருத்துகள் கூட்டணி பிரச்சனை ஏற்படும் வகையில் உள்ளது. அதனை தவிர்க்கும் வகையில் அக்கட்சியினர் கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும்
துணை முதலமைச்சர்
ஓ. பன்னீர்செல்வம்,         
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி
ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக கூட்டணி வியூகங்களைக் குறித்து கட்சித் தலைமை மட்டுமே முடிவெடுக்கும்.
அதிமுகவினர் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை
பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது.

அதிமுக அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து அதிமுகவைச் சேர்ந்த சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மிகுந்த கட்டுப்பாடும், ஒழுங்கும், ஜனநாயகப் பண்பும் நிறைந்த அதிமுகவின் தற்போதைய கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தீர ஆராய்ந்து, கட்சியின் கொள்கை கோட்பாடுகளின்படி முடிவெடுப்பார்கள். ஜெயலலிதா காட்டிய வழிகளில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளைப் பற்றிய தனிநபர்களின் விமர்சனங்களும், கருத்துக்களும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி அதிமுகவிற்கு ஊறு விளைவிக்கும் என்பதால் அத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று அதிமுகவினர்களை கண்டிப்புடன் நெறிப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
மக்கள் நலப் பணிகளை திறம்பட ஆற்றி கழகத்திற்கு பெருமை சேர்க்கும் வேலைகளில் மட்டுமே அதிமுகவினர் இப்போது ஈடுபட வேண்டும்.

கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.