ETV Bharat / state

மாநிலங்களவை பதவி: அதிமுகவுக்குள் போட்டா போட்டி! - ADMK-DMK

சென்னை: அதிமுகவிலிருந்து மூன்று பேர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், அந்தப் பதவிக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான போட்டி நிலவிவருகின்றது.

admk
author img

By

Published : May 29, 2019, 2:15 PM IST

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக 37 இடங்களிலும், அதிமுக தேனி தொகுதியிலும், 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் வெற்றிபெற்றன. இதனால் சட்டப்பேரவையில் அதிமுக எண்ணிக்கை 123 ஆகவும், திமுக110 ஆகவும் உயர்ந்துள்ளது.

சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தைப் பொறுத்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதன்படி 34 எம்எல்ஏக்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுகிறார். இதன்படி அதிமுக, திமுகவுக்கு தலா மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைப்பர்.

இதில் அதிமுக கூட்டணியின்போது மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு ஒரு உறுப்பினர் பதவி தர வேண்டும். அதேபோல திமுகவானது மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை பதவி தர வேண்டும். திமுகவை பொறுத்தவரை இதில் எந்த பிரச்னையும் இருக்க வாய்ப்பில்லை.

அதிமுகவில் மீதமுள்ள இரண்டு சீட்டுகளுக்கு போட்டா போட்டி நிலவிவருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தங்களுக்குதான் தரவேண்டும் என பல்வேறு தரப்புகள் அதிமுக தலைமையை நிர்பந்தித்து வருகின்றன.

இதில் குறிப்பாக கே.பி. முனுசாமி, தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், நத்தம் விசுவநாதன் ஆகிய சீனியர்கள் மாநிலங்களவை பதவிக்கு போட்டி போடுகின்றனர். இதேபோல் அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ஜே.சி.டி. பிரபாகரன், பாலகங்கா, பொள்ளாச்சி வேட்பாளர் மகேந்திரன் ஆகியோரும் மாநிலங்களவை பதவி பெற ஆர்வம் காட்டிவருகின்றனர்.

சென்னை// வி.டி. விஜய்// சிறப்பு செய்தி                                         அதிமுக ராஜ்யசபா பதவிக்கு போட்டா போட்டி           

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பிடித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பிரதமராக மோடி வரும் 30ம் தேதி பதவி ஏற்க உள்ளார். தமிழகத்தில் திமுக 37 இடங்களில் வென்றுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 123 ஆகியுள்ளது. திமுகவின் பலம் 110 ஆக உயர்ந்துள்ளது. சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தைப் பொறுத்து நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதன்படி 34 எம்எல்ஏக்களுக்கு ஒரு ராஜ்யசபா எம் பி தேர்வு செய்யப்படுகிறார். இதன்படி அதிமுகவுக்கு தலா மூன்று, திமுகவுக்கு தலா 3 ராஜ்யசபா உறுப்பினர்கள் கிடைப்பர்.     

 இதில் அதிமுக கூட்டணியின் போது மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு ஒரு உறுப்பினர் பதவி தர வேண்டும். அதேபோல திமுகவானது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வுக்கு ஒரு ராஜ்யசபா பதவி தர வேண்டும். திமுக ராஜ்யசபா பதவியை பொறுத்தவரையில் ஸ்டாலின் ஆணைப்படியே நடக்கும். ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை. ஜெ. இல்லாததால் 'இபிஎஸ்- ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் அதிருப்திகளும் குழப்பங்களுமே நீடித்து வருகிறது. அதிமுகவில் மீதமுள்ள இரண்டு சீட்டுகளுக்கு போட்டா போட்டி நிலவி வருகிறது. ராஜ்யசபா உறுப்பினர் பதவியை தங்களுக்கு தான் தரவேண்டும் என பல்வேறு தரப்புகள் அதிமுக தலைமையை நிர்பந்தித்து வருகின்றன. இதில் குறிப்பாக கே.பி. முனுசாமி, தற்போதைய ராஜ்யசபா எம்பி மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், நத்தம் விசுவநாதன் ஆகிய சீனியர்கள் ராஜ்யசபா பதவியை பெறுவதற்கு காய் நகர்த்தி வருகின்றனர். இதேபோல அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ஜே சி டி பிரபாகரன், பாலகங்கா, பொள்ளாச்சி வேட்பாளர் மகேந்திரன் ஆகியோரும் தங்களுக்கு ராஜ்யசபா பதவியை பெற வேண்டி அதிமுக தலைமையிடம் நெருக்கம் காட்டி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.