தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடத்த மூன்றாவது நாளாகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஆகஸ்ட் 18) தொடங்கியது. அப்போது, அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அமளி செய்தனர். இதையடுத்து பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவையில் அதிமுகவினர் பதாகைகள் கொண்டுவந்தது தவறு, விதியை மீறி அவையில் இதுபோல் ஈடுபடுவது தவறு, அவையை கண்ணியமாக நடத்தவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் தர்ணா
அப்போது, அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கும் நடவடிக்கையில் (எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவின் முக்கியத் தலைவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை) திமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது எனக் கூறி அதிமுகவினர் வெளிநடப்புச் செய்தனர். அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
கோடநாடு கொலை வழக்கு: விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் பேசியதாகத் தகவல்
முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை, நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடைபெறுகிறது. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்க வேண்டும் என்றார். இந்த நிலையில், வெளிநடப்புச் செய்த எதிர்க்கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர். அதன்படி ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், "நடைமுறைக்கு ஒத்துவராத வாக்குறுதிகளைப் பொய்யுரையாக மக்களுக்கு அளித்து, அதன் மூலமாக வெற்றிபெற்று இன்று ஆட்சிக் கட்டிலில் உள்ள திமுக அரசு மக்களுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாமல் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை தனது அதிகார பலத்தால் நசுக்கும் செயலைக் கண்டிக்கும் வகையில் அதிமுக தொடர்ந்து சட்டப்பேரவையில் குரல் கொடுத்தனர்.
காலணி தைப்பவரின் மகனான என்னை அமைச்சராக்கியது மோடிதான் - எல். முருகன் உருக்கம்
அதற்கு வாய்ப்பு அளிக்காமல் அடுத்த நடவடிக்கையில் பேரவையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொய்யுரைகளைத் தயார் செய்து எங்களை அச்சுறுத்தும் ஜனநாயக விரோத நடவடிக்கையில் திமுக செயலாற்றிவருகிறது.
பேரவை நிகழ்வுகள் புறக்கணிப்பு
அதிமுகவை நசுக்கும் தவறான கண்ணோட்டத்தோடு செயல்பட்டுவருகிறார்கள். அவர்கள் தொடுகின்ற அத்தனை வழக்குகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். இன்றும் நாளையும் நடைபெறவுள்ள கூட்ட நிகழ்வுகளைப் புறக்கணிப்போம்" என்றார்.
இதையும் படிங்க: சமூகநீதியை இந்தியா முழுவதும் நிறைவேற்றியது மோடிதான் - எல். முருகன் பெருமிதம்