ETV Bharat / state

அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்: தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் - இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தல் வேட்பாளர் முடிவு
author img

By

Published : Sep 24, 2019, 6:43 PM IST

Updated : Oct 3, 2019, 1:17 PM IST

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் பாண்டிச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டொபர் 21 ஆம் தேதி நடக்கும் என் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் இரண்டு நாட்கள் பெறப்பட்டு நேற்று நேர்காணலும் நிறைவு பெற்றது.

இன்னும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இக்கூட்டத்தின் முடிவில் இரண்டு தொகுதிகளுக்குமான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தகவல் வெளியானது ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் இன்று வெளியாகிறதா?

Intro:Body:அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் பாண்டிச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டொபர் 21 ஆம் தேதி நடக்கும் என் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் 2 நாட்கள் பெறப்பட்டு நேற்று நேர்காணலும் நிறைவு பெற்றது. இன்னும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடக்கிறது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இடை தேர்தலிலும், விரைவில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சி தேர்தலிலும் தொண்டர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும், புதிய உறுப்பினர் சேர்க்கை, பொதுக்குழு , செயற்குழு கூட்டுதல் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டம் முடிந்த பிறகு இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. Conclusion:
Last Updated : Oct 3, 2019, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.