ETV Bharat / state

“10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பை அதிமுக ஏற்கிறது” - ஜெயக்குமார் - கருணாநிதி

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அதிமுக ஏற்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar  admk ex minister  admk  ex minister jayakumar  admk ex minister jayakumar  10 percentage reservation  supreme court judgement on 10 percent reservation  supreme court judgement  supreme court  இட ஒதுக்கீடு  ஜெயக்குமார்  10 சதவீத இட ஒதுக்கீடு  உச்ச நீதிமன்றம்  அதிமுக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  ஏழு பேர் விடுதலை  கருணாநிதி  திமுக கூட்டணி
ஜெயக்குமார்
author img

By

Published : Nov 12, 2022, 7:01 AM IST

சென்னை சாந்தோமில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , “ஏழு பேர் விடுதலையில் தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். அதை தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

அவரது மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனவே, ஏழு பேர் விடுதலை என்பது அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த சமயத்தில் அவர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நளினியை தவிர மீதமுள்ளவர்களின் தண்டனையை குறைக்க கூடாது என கையெழுத்திடப்பட்டது. ஆனால் தற்போது, 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்த உடன், அந்த விடுதலைக்கு நாங்கள் தான் காரணம் என திமுக மார்தட்டி கொள்கிறது. இதில் எந்த வித அடிப்படை முகாந்திரமும் இல்லை. அவர்கள் விடுதலைக்கு திமுக ஒரு துரும்பை கூட தூக்கி போடவில்லை.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்திலேயே அவர் நினைத்திருந்தால் எழுவரையும் விடுதலை செய்திருக்கலாம். பொய்யே வாழ்க்கையாக கொண்ட கட்சி திமுக. தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதில் அக்கறை காட்டுவதில்லை. குடும்ப வளர்ச்சி, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டும், இது தான் திமுகவினரின் நோக்கம்.

10 சதவீத இட ஒதுக்கீடு காங்கிரஸ் உடன் திமுக கூட்டணியில் இருந்த போது கொண்டு வரப்பட்டது. அப்போது மத்திய அமைச்சராக மு.க அழகிரி இருந்தபோது நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு அப்போது திமுக சம்மதம் தெரிவித்தது.

10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு விதை போட்டது, தண்ணீர் ஊற்றியது யார்?. 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு காரணம் திமுக தான். மாநில முதலமைச்சர் ஏற்பாடு செய்யும் அனைத்து கட்சி கூட்டம் தான் தோன்றி தனமாக நடத்தப்படும் கூட்டம். சரியான திட்டமிடல் இல்லாது கூட்டம். எனவே இந்த கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கிறது” என கூறினார்.

பிரதமர் மோடியை சந்திக்கவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிக்கை விட்டிருப்பதாக ஆர்.எஸ் பாரதி விமர்சித்தது குறித்து பேசிய ஜெயக்குமார், “பிரதமரை எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பது மரபு. தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுத்துவிட்டு இன்று திமுக பசப்பு வார்த்தை மூலம் திசை திருப்புகிறது” என கூறினார்.

அரசாணை 115 மற்றும் 152 குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், “ஆண்டுக்கு 10 லட்சம் பேர் என்கிற விகிதத்தில் 5 வருடத்தில் 50 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என திமுக சார்பில் தேர்தல் சமயத்தில் கூறப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டதா?. தனியார் மூலம் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்தால், இட ஒதுக்கீடு எவ்வாறு பின்பற்றப்படும்.

இது சமூக நீதிக்கு எதிரான பிற்போக்கு கட்சி திமுக. தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டை நாமம் போட்ட அரசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு, சமூக நீதிக்கு எதிரான பிற்போக்கு அரசு, இது தான் திமுக மீது மக்கள் கொண்டுள்ள பார்வையாக உள்ளது.10% இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அதிமுக ஏற்கிறோம்” என கூறினார்.

இதையும் படிங்க: ’இதற்குத் தான் தவிப்போடு காத்துக் கிடந்தோம்..!’ - ஆறு பேர் விடுதலை குறித்து பேரறிவாளன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.