ETV Bharat / state

பாஜகவிடம் இருந்து எதிர்க்கட்சி இடத்தைப் பாதுகாக்க ஈபிஎஸ் முயற்சி.. பின்னணி இதுதான்! - ஈபிஎஸ் போராட்டம்

சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 9, 13, 14 ஆகிய தேதிகளில் அதிமுக அறிவித்துள்ள போராட்டத்தின் மூலம் தமிழகத்தின் எதிர்கட்சி அதிமுக தான் என்பது நிரூபணமாகும் என தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈபிஎஸ்
ஈபிஎஸ்
author img

By

Published : Dec 4, 2022, 8:07 PM IST

Updated : Dec 4, 2022, 8:15 PM IST

சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இரு அணிகள் பிரிந்தன. அதிமுக ஒற்றைத் தலைமை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஈபிஎஸ்-ஆல் தனித்து செயல்பட முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் எதிர்க்கட்சி இடத்தை பாஜக ஆக்கிரமிப்பு செய்யும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்கான முயற்சியில் தற்போது ஈபிஎஸ் இறங்கியுள்ளார்.

சொத்து வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக திமுக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மெகா போராட்டங்களை ஈபிஎஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சியாக பாஜக செயல்படுகிறது என்ற பிம்பத்தை உடைக்க ஈபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தற்போது அதிமுகவில் நிலவும் குழப்பமான சூழ்நிலையை சாதமாக்கி தங்களை எதிர்க்கட்சியாக முன்னிலைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் பிளவால் பாஜகவின் மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு ஆளுங்கட்சியான திமுக அரசை விமர்சனம் செய்ய ஏதுவாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை இணைத்து அதிமுக: ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்பினரும் பாஜகவிற்கு இணக்கமாகவே செயல்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட ஈபிஎஸ்க்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

உள்கட்சி பிரச்னை காரணமாக எதிர்க்கட்சி என்ற செயல்பாட்டை அதிமுக செய்யத் தவறி வருகிறது. கோவை, சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் நடத்திய போராட்டத்தை முன்னிலைப்படுத்தி தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை பாஜக உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

அமித் ஷாவை சந்திக்க மறுத்த ஈபிஎஸ்: தொடர்ந்து 'நாங்கள் தான் எதிர்க்கட்சி' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி வரும் நிலையில், இதனை ரசிக்காத ஈபிஎஸ், பாஜகவை எதிர்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளார். மேலும் தனியார் நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அமித் ஷாவை ஓபிஎஸ் சந்தித்த போதும், ஈபிஎஸ் சந்திக்காதது அதன் அதிர்வலையைக் காட்டியது.

தேசியக் கட்சிக்கும், மாநில கட்சிக்கும் விளக்கம்: மயிலாடுதுறையில் மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட வந்த ஈபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோதும், "அமித் ஷாவை நான் ஏன் சந்திக்க வேண்டும். அவர்கள் தேசிய கட்சி, நாங்கள் மாநில கட்சி. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடியை வரவேற்றேன்" என்று வெளிப்படையாக கூறினார்.

இந்த நிகழ்வை வைத்து பாஜகவை எதிர்க்க ஈபிஎஸ் தயாராகி வருவதாக கூறப்பட்டது. தொடர்ந்து திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும், ஊழல் நடந்திருப்பதாகவும் ஆளுநர் ரவியிடம் ஈபிஎஸ் மனு அளித்தார். இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவராக ஈபிஎஸ் செயல்படத் தொடங்கிவிட்டதாக பேசப்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் சரமாரி கேள்வி: இதனைத்தொடர்ந்து கோவையில் நடைபெற்ற திமுக அரசுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஈபிஎஸ் முன்வைத்தார். இதில் "பொம்மை முதலமைச்சர்'' எனவும், ''திறமை இல்லாத அரசு" என்றும் அவர் விமர்சித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேலும் டிசம்பர் 9ஆம் தேதி பேரூராட்சிகளிலும், டிசம்பர் 13ஆம் தேதி மாநகராட்சிகளிலும், டிசம்பர் 14ஆம் தேதி ஊராட்சி ஒன்றியங்களிலும் சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் பாஜக எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்ற பிம்பம் உடைக்கப்படும் என ஈபிஎஸ் தரப்பு நம்புகின்றனர்.
மூத்த பத்திரிகையாளர் கூறுவது என்ன? இதுகுறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், "திமுகவிற்கு மாற்றாக பாஜகவால் அதிமுகவை பின்னுக்குத் தள்ள முடியாது என்று, ஈபிஎஸ்ஸின் இது போன்ற செயல்பாடுகளில் தெரிகிறது. இதனால் தொண்டர்களின் மன உறுதி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். அதிமுகவின் செல்வாக்கைத் தொடர்ந்து குறைப்பதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்பது உண்மை தான்.

ஆனால், ஈபிஎஸ் என்னதான் செயல்படத் தொடங்கினாலும் அதிமுக தொடர்பான பொதுக்குழு வழக்கு, சட்டப்போராட்டம் ஆகியவை உள்ளன. இதனால் எடப்பாடி பழனிசாமியால் நிம்மதியாக இருக்க முடியாது" என்றார்.

இதையும் படிங்க: 'தீ.. தளபதி...' வெளியானது வாரிசு படத்தின் 2ஆவது பாடல்

Last Updated : Dec 4, 2022, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.