ETV Bharat / state

உதயநிதிக்கு பேனர் வைத்த காவலர் - அதிமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் - சென்னை செய்திகள்

"நெஞ்சுக்கு நீதி" திரைப்படத்திற்கு வாழ்த்து பேனர் வைத்த பெரம்பலூர் மாவட்ட தலைமைக் காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி அதிமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உதயநிதிக்கு பேனர் வைத்த காவலர்
உதயநிதிக்கு பேனர் வைத்த காவலர்
author img

By

Published : May 21, 2022, 9:06 PM IST

சென்னை: சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள படம் "நெஞ்சுக்கு நீதி". இந்த படம் வெற்றிபெற வாழ்த்தி பெரம்பலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் கதிரவன் என்பவர் பேனர் ஒன்றை வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமைக் காவலர் கதிரவன் மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமைக் காவலர் கதிரவன் மீது துறைரீதியிலான நடவடிக்கை மற்றும் கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான பாபு முருகவேல் ஆகியோர் இன்று (மே 21) புகார் அளித்தனர்.

அதில், "அரசு ஊழியர்கள் அரசுக்காகதான் பணிபுரிய வேண்டும்; அரசிற்காக பணியாற்றக்கூடாது. அரசு நிரந்தரமானது, அரசாங்கம் மாறிக்கொண்டே இருக்கும். "நெஞ்சுக்கு நீதி" திரைப்பட வெளியீட்டிற்காக பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் கதிரவன் என்பவர் விளம்பர பதாகை வைத்திருப்பதை சமூக வலைத்தளங்களில் பார்த்து அது அப்பட்டமான காவல் துறை ஊழியர்கள் வழிமுறை நிர்வாகச் சட்டத்தின் பிரிவு 29ன் கீழ் கண்டிக்கக் கூடிய குற்றம்.

சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் ஆகியும் அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் காவல் துறை எடுக்காத பட்சத்தில் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளேன். காவல் துறை தலைமை இயக்குநர் முதல் கடை நிலை காவலர் வரை ஒழுக்கமாகவும், ஒழுக்கத்தை போதிக்கின்றவர்களாகவும் இருக்க வேண்டும். கதிரவனின் செயல்பாடு யாரையோ ஒருவரை திருப்திப்படுத்துவதற்காகவும் உள்நோக்கம் உள்ளதாக அறிய வருகிறது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதயநிதிக்கு பேனர் வைத்த காவலர் மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.