நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள 8 கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து கடந்த 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயக்கம் காட்டியதால் தொகுதியை ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஆவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவை பற்றி முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று இரண்டுமுறை தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தொகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி
அதிமுக-சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்புர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி) , திருநெல்வேலி, பெரம்பலுார், நீலகிரி (தனி) திருநெல்வேலி, தேனி, மதுரை, தொகுதிகள் அறிவிப்பு
பாமக-மத்திய சென்னை, ஸ்ரீபெரும்பதுார், தருமபுரி, திண்டுக்கல்,
சென்னை வடக்கு,
பாஜக-ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, தூத்துக்குடி
தேமுதிக-கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை வடக்கு, விருதுநகர்
தமிழ் மாநில காங்கிரஸ்- தஞ்சாவுர்
புதிய தமிழகம் கட்சி - தென்காசி
புதிய நீதிக் கட்சி - வேலுார்
என்.ஆர். காங்கிரஸ் - புதுச்சேரி என அறிவிக்கப்பட்டுள்ளது.