ETV Bharat / state

ஆட்டம் காணும் அதிமுக - பாஜக கூட்டணி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே ஏற்பட்ட கூட்டணி உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.

Bjp - admk
author img

By

Published : Jun 7, 2019, 4:01 PM IST

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' பத்திரிக்கையில் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்றதில்லை, மண்டியிட்டு கிடந்ததும் இல்லை என்று துக்ளக் பத்திரிகை விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் அமைத்த கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தேர்தலில் அதிமுக தேனி வேட்பாளரும், துணை முதல்வர் மகனுமான ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றிபெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட 5 வேட்பாளர்கள் உட்பட மற்ற கட்சியினர் படுதோல்வி அடைந்தனர். ஆனால் மத்தியில் பாஜக மெகா வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் 'அதிமுக 2 தொகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும், 5 தொகுதிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும், 5 தொகுதிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்றிருக்கிறது. பாஜக 2 தொகுதிகளில் 2 லட்சத்துக்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், ஒரு தொகுதியில் 3 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்றுள்ளது. ஒருவேளை மோடி எதிர்ப்பு அலை வீசி இருந்தால் எல்லா தொகுதிகளிலும் பாஜக 4 முதல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்க வேண்டும். அப்படியெனில் யாருக்கு எதிரான எதிர்ப்பு அலை இது? என்று பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து புதிய பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான வேலைகள் நடக்கையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சர் ஆக்கி விடலாம் என்று காய் நகர்த்த, பதிலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தை அமைச்சராக்க ஏற்பாடு செய்து ஓபிஎஸ்க்கு செக் வைத்தார் இபிஎஸ். இருவருக்கும் எதுவும் கிடையாது என்று பாஜக அரசு திருப்பி அனுப்பிவிட்டது.

தமிழ்நாட்டில் இருந்து ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சர் ஆக்குவதற்காக நடந்த அரசியல் களேபரங்களை துக்ளக் பத்திரிக்கை கார்ட்டூன் மூலம் விமர்சித்தது. அதில் மோடி, அமித்ஷா, உணவகத்தில் உணவு உண்ணுவது போலவும், வெளியே நின்று இபிஎஸ், ஓபிஎஸ் உடன் ஒரு சிறுவன் அழுது உணவுக்காக ஏங்குவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.

துக்ளக் குருமூர்த்தியின் கார்ட்டூன் விவகாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான 'நமது அம்மா' பத்திரிகையில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

Bjp - admk
துக்ளக் விமர்சனத்துக்கு ‘நமது அம்மா’ பதிலடி

அதில் ' கழகம் தொடங்கப்பட்டு 42 வருடங்களில் ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலாக அதிகாரத்தில் அமர்ந்து, ஆட்சியில் அமர்ந்து கொண்டே வெற்றி பெற்று, ஆட்சியைத் தொடர்கிற அரசியல் புரட்சியை, தமிழகத்தில் 32 வருடங்களுக்குப் பிறகு நடத்தி காட்டியிருக்கும் அதிமுக, ஒருபோதும் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கும் நின்றதில்லை, மண்டியிட்டு கிடந்ததும் இல்லை என்பதே வரலாறு என்று எழுதியுள்ளது.

அதிமுக, பாஜக உறவில் எவ்வித விரிசலும் இல்லை என்று கூறிவந்தாலும், அதிமுக தொண்டர்களுக்கு பாஜக உடனான கூட்டணியில் விருப்பம் இல்லாததுதான் தோல்விக்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்த கருத்துப் போர் அதிமுக - பாஜக விரிசலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

சென்னை // வி.டி. விஜய்// சிறப்பு செய்தி

ஆட்டம் காணும் அதிமுக - பாஜ கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே ஏற்பட்ட கூட்டணி உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிமுக அதிகாரபூர்வ நாளேடான 'நமது அம்மா' பத்திரிக்கையில் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்றதில்லை; மண்டியிட்டு கிடந்ததும் இல்லை என்று கூறியும், துக்ளக் பத்திரிக்கையை விமர்சித்தும் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைத்த கூட்டணியில் பாஜ, தேமுதிக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தலில் அதிமுக தேனி வேட்பாளரும், துணை முதல்வர் மகனுமான ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றிபெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட 5 வேட்பாளர்கள் உள்பட மற்ற கட்சியினர் படு தோல்வி அடைந்தனர். ஆனால் மத்தியில் பாஜக மெகா வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் 'அதிமுக 2 தொகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும், 5 தொகுதிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும்,  5 தொகுதிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்றிருக்கிறது. பாஜக 2 தொகுதிகளில் 2 லட்சத்துக்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், ஒரு தொகுதியில் 3 லட்சத்துக்கு குறைவான வாக்குகள் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்றுள்ளது. ஒரு வேளை மோடி எதிர்ப்பு அலை வீசி இருந்தால் எல்லா தொகுதிகளிலும் பாஜக 4 முதல் 5 லட்சம் வித்தியாசத்தில் தோற்றிருக்க வேண்டும். அப்படியெனில் யாருக்கு எதிரான எதிர்ப்பு அலை இது?  என்று பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து புதிய பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான வேலைகள் நடக்கையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சர் ஆக்கி விடலாம் என்று காய் நகர்த்த, பதிலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தை அமைச்சராக்க ஏற்பாடு செய்து ஓபிஎஸ்க்கு செக் வைத்தார் இபிஎஸ். இருவரில் யாருக்கும் எதுவும் கிடையாது என்று பாஜக அரசு திருப்பி அனுப்பி விட்டது. தமிழகத்தில் இருந்து  ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சர் ஆக்குவதற்காக நடந்த அரசியல் களேபரங்களை துக்ளக் பத்திரிக்கை கார்ட்டூன் மூலம் விமர்சித்து எழுதி இருந்தது. அதில்' மோடி, அமித்ஷா உணவகத்தில் உணவு உண்ணுவது போலவும், வெளியே நின்று இபிஎஸ், ஓபிஎஸ் உடன் ஒரு சிறுவன் அழுது உணவுக்காக ஏங்குவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.  

துக்ளக் குருமூர்த்தி மற்றும் கார்ட்டூன் விவகாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அதிமுக அதிகாரபூர்வ நாளேடான 'நமது அம்மா' பத்திரிக்கையில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் 'கழகம் தொடங்கப்பட்டு 42 வருடங்களில் ஏறத்தாழ 30 வருடங்கள் மேலாக அதிகாரத்தில் அமர்ந்து ஆட்சியில் இருந்து கொண்டே வெற்றி பெற்று ஆட்சியை தொடர்கிற அரசியல் புரட்சியை தமிழகத்தில் 32 வருடங்களுக்கு பிறகு நடத்தி காட்டியிருக்கும் அண்ணா திமுக ஒருபோதும் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்றதில்லை; மண்டியிட்டு கிடந்ததும் இல்லை என்பதே வரலாறு' என்று எழுதியுள்ளது.

அதிமுக, பாஜ உறவில் எவ்வித விரிசலும் இல்லை என்று கூறி வந்தாலும் அதிமுக தொண்டர்களுக்கு பாஜக உடனான கூட்டணியில் விருப்பம் இல்லாததுதான் தோல்விக்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்த கருத்து போர் அதிமுக - பாஜக விரிசலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.  
 
-- 
V.T. VIJAY,
Reporter/ Content Editor,
E TV bharat,
chennai.
+91 9629185442

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.