ETV Bharat / state

‘திமுக ஆட்சியில் செயல் இழந்த காவல்துறை’ - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவல்துறை செயல் இழந்துள்ளது என சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
author img

By

Published : Apr 20, 2022, 9:39 PM IST

சென்னை: மயிலாடுதுறையில் நேற்று (ஏப். 19) ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப். 20) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து பேரவையிலிருந்து அதிமுக, பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மயிலாடுதுறையில் ஆளுநர் நிகழ்ச்சிக்கு சென்ற போது, அவர் கார் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தது. போராட்டக்காரர்களுக்கு காவல்துறையே முன் வந்து பாதுகாப்பு அளித்துள்ளது. காவல்துறையின் செயல் கண்டிக்கதக்கது.

ஆளுநர் கார் மீது நடைபெற்ற தாக்குதல் காவல்துறை மீது ஏற்பட்டுள்ள கரும்புள்ளி. திமுக ஆட்சியில் காவல்துறை செயல் இழந்துள்ளது. ஆளும் கட்சி நேரடியாக தலையிடாமல், மற்ற கட்சிகளை வைத்து, இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. ஆளுநர் கார் தாக்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கத்தின் பின்புலம் தெளிவாக தெரிகிறது.

எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

தமிழ்நாட்டில் கொலை, திருட்டு என குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. 18 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததால் திமுக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்துக்கொண்டு இது போன்ற செயலில் ஈடுபடுகிறது. இது கண்டிக்கத்தக்கது" என்றார்.

தொடர்ந்து பேசிய பாஜக நயினார் நாகேந்திரன், "ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதை, பாஜக வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறது. காவல்துறை சரியில்லை. முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது, கருப்புக் கொடி காட்டக்கூடாது என்று உள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் நேற்று ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுநரைத் தாக்க இது அதிமுக அரசு அல்ல - சட்டப்பேரவையில் ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.