ETV Bharat / state

'திமுக ஆட்சிக்கு வராமல் இருக்க அதிமுக கூட்டணி வெறிகொண்டு பணியாற்றுகிறது' - பா.வளர்மதி - முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி

சென்னை: திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிமுக கூட்டணிக் கட்சியினர் வெறிகொண்டு பணியாற்றி வருவதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசினார்.

valarmathi speech
பா. வளர்மதி பேச்சு
author img

By

Published : Mar 17, 2021, 8:22 AM IST

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி அறிமுகக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் எல்எல்ஏ வி.என்.பி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். ஏசுபாதம், வைரமுத்து, பரணிபிரசாத், தனசேகரன் ஆகியோர் கூட்டத்தில் முன்னிலை வகித்தனர். அதிமுக, பாஜக மாவட்டத் தலைவர் சாய சத்யன், பாமக மாவட்ட செயலாளர் அரங்கநாதன், தமாகா செயலாளர் முனைவர் பாஷா, புரட்சி பாரதம் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பா.வளர்மதி பேசியதாவது:

"இந்தத் தேர்தல் சவாலானது. வெற்றிபெற பாடுபாட வேண்டும். ஆலந்தூர் அதிமுக கோட்டை. கூட்டணிக் கட்சியினர் மத்தியில் வருத்தம் இருக்கும். இந்தக் கூட்டணி எதையும் வருத்தப்படாமல் வெற்றி இலக்குடன் பயணிக்கிறது.

இந்த முறை அதிமுக வெற்றி பெற்றால் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு இருக்கும். வரும் தேர்தலில் திமுகவை அழிக்கவும், அவர்கள் ஆட்சிக்கும் வர கூடாது என்பதிலும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் வெறியுடன் செயல்படுகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: ’சத்தமில்லாமல் கொள்ளை அடிப்பவர் அமைச்சர் தங்கமணி’ - மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.