ETV Bharat / state

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை - ஒரே நாளில் 7,652 பேர் விண்ணப்பம்! - நேற்று ஒரே நாளில் 7652 பேர் ஆன்லைனில் பதிவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நேற்று(நவ.3) ஒரே நாளில் 7 ஆயிரத்து 652 மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

roadadmission-to-medical-college-begins-today

author img

By

Published : Nov 4, 2020, 2:07 PM IST

Updated : Nov 4, 2020, 7:50 PM IST

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 652 மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். அவர்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 5 ஆயிரத்து 455 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2 ஆயிரத்து 197 மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பிஎஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நேற்று(நவ.3) முதல் 12ஆம் தேதி வரை www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் 2 ஆயிரத்து 784 இடங்களும், இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 65 இடங்களும், ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியில் 127 இடங்களும், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் 55 இடங்களும் நிரப்பப்படவுள்ளன.

அதேபோல் பி.டி.எஸ். படிப்பில் அரசுப் பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்களும், ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் 80 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 4 ஆயிரத்து 61 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் ஆயிரத்து 223 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று முதல் 12ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 16 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நேற்று ஒரே நாளில் 7652 மாணவர்கள் ஆன்லைன் முறையில் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு - நவம்பர் 9 இல் கருத்து கேட்பு

Last Updated : Nov 4, 2020, 7:50 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.