ETV Bharat / state

1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 9,10,11ஆம் வகுப்பு மாணவர் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும், கரோனா தொற்று தளர்வுகள் உள்ள 27 மாவட்டங்களில் 1 முதல் 12 ம் வகுப்பு வரையில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

admission-started-in-27-districts-in-tn
1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை
author img

By

Published : Jun 14, 2021, 6:47 PM IST

சென்னை: இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள கடிதத்தில், "2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10,11ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான சான்றிதழ்களை வழங்குவதற்கு 14ஆம் தேதி முதல் வருகை தர வேண்டும்" என கூறப்பட்டு உள்ளது.

"கரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2021-22ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை அரசின் வழிகாட்டுதல் படி உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 11 மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று குறைவிற்கு பின்னர் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலை் பள்ளி வரை மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரியவும், அந்த ஆசிரியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியினை அந்ததந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டு முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும்.

2021-22ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அனைத்து வகுப்புகளுக்கும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும். மேலும் மாணவர் சேர்க்கை விபரத்தை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க ஆசிரியர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.