ETV Bharat / state

எம்.டி.(ஓமியோபதி) மருத்துவப் பட்ட மேற்படிப்பு 28 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..! - ஓமியோபதி பட்டமேற்படிப்பிற்கான விண்ணப்பங்கள்

ஓமியோபதி மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான விண்ணப்பங்கள் 28ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.டி.(ஓமியோபதி) மருத்துவப் பட்டமேற்படிப்பு 28 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..!

author img

By

Published : Dec 27, 2021, 7:19 AM IST

சென்னை:எம்.டி.(ஓமியோபதி) மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் தனியார் கல்லூரியில் உள்ள இடங்களில் சேர்வதற்கு 28 ந் தேதி முதல் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளான சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் ஓயிட் மெமோரியல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி.(ஓமியோபதி) மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஓமியோபதி மருத்துவத்திற்கான அகில இந்திய முதுநிலை மருத்துவப்படிப்பு நுழைவுத்தேர்வு 2021-ல் தகுதி பெற்றவர்களிடமிருந்து அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை (முறையே அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக) www.tnhealth.tn.gov.in – என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் சென்னை-106 அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி இயக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது எந்தவொரு அரசு இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் இருந்தோ விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பப்படிவங்களை 28.12.2021 காலை 10 மணி முதல் ஜனவரி 18 ந் தேதி பிற்பகல் 5 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2022 ஜனவரி 18 ந் தேதி மாலை 5.30 மணி வரை சமர்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம், தகுதி, படிப்புகளுக்கான சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் போன்ற தகவல்கள் www.tnhealth.tn.gov.in – என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட உரிய தகவல் தொகுப்பேட்டில் இடம் பெற்றுள்ளன.

விண்ணப்படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரியில் 2022 ஜனவரி 18 ந் தேதி மாலை 5.30 மணி அல்லது அதற்கு முன் வந்தடையுமாறு சமர்ப்பிக்கவேண்டும். தாமதமாக, கடைசி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது.

கலந்தாய்வின் போது நடைமுறையில் உள்ள இனசுழற்சி விதிமுறைகள் அரசின் உத்தரவின் படி பின்பற்றப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Operation கஞ்சா வேட்டை: தூத்துக்குடியில் ரூ.23 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.