ETV Bharat / state

சூரியனை ஆய்வு செய்ய தொடங்கியது ஆதித்யா எல்.1 - தரவுகள் சேகரிப்பு - இஸ்ரோ தகவல்! - ஆதித்யா L1 விண்கலம்

ISRO UPDATE: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா L1 விண்கலம் அதிவெப்ப ஆற்றலை அளவிடும் பணியின் மூலம் தரவுகளை சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ISRO UPDATE
தரவுகளை சேகரிக்கத் தொடங்கியது ஆதித்யா L1 விண்கலம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 3:44 PM IST

Updated : Sep 18, 2023, 4:13 PM IST

சென்னை: சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஆதித்யா L1 விண்கலம் தற்போது, L1 புள்ளியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆதித்யா L1 விண்கலத்தில் உள்ள சென்சார்கள் அதிவெப்ப ஆற்றலை அளவிடும் பணியை தொடங்கி உள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா L1 என்ற விண்கலம் கடந்த செப். 2ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி சி. 57 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஆதித்யா L1 வெற்றிகரமாக தனியாகப் பிரிந்து புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

சூரியனை நோக்கி அதன் சுற்றுவட்ட பாதையை படிப்படியாக உயர்த்தும் பணிகள் மூன்று கட்டமாக நடந்து முடிந்தன. இதைத்தொடர்ந்து செப்.15ஆம் தேதி நான்காவது முறையாக சுற்றுவட்டப் பாதையின் உயரம் அதிகரிப்பட்டது. சூரியனை ஆய்வு செய்தவற்கான பயணம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இன்று (செப்.18) ஆதித்யா L1 தனது ஆராய்ச்சி பணிகளை தொடங்கி உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவலில், "ஆதித்யா L1 விண்கலம் தனது அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியது. ஸ்டெப்ஸ் (STEPS) கருவியின் ஏஎஸ்பிஎக்ஸ் சென்சார்கள் பூமியில் இருந்து, சுமார் 50,000 கி.மீ தொலைவில் இருக்கும் அதிவெப்ப ஆற்றலை அளவிடும் பணியைத் தொடங்கியது. இந்த கருவியில் ஆறு சென்சார்கள் கடந்த 10ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கின.

இந்த கருவியானது வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் காந்த அலைகளையும், காந்த மண்டலத்தையும் கண்கானிக்கும். இந்த 50,000 கி.மீ தொலைவு என்பது பூமியின் விட்டதை விட நான்கு மடங்கு பெரியது. இந்த கருவியானது, ஏ-ஸ்பெக்ஸ் (A-SPECS) என்ற சூரிய காற்று மற்றும் சூரிய காந்த தன்மைகளை குறித்தும், சூரிய சக்தியை ஆராயும்.

சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் வெப்பத்தைக் கண்காணிக்கும் சோலெக்ஸ், சூரியனின் வெளிப்புற அடுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும். ஹெல் 10எஸ் ஆனது கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புலத் தன்மையை அளவிடும் மேக்னோமீட்டர் அளவில் ஆராயச்சி செய்யும்.

தற்போது, ஆதித்யா L1 விண்கலம் சூரியன்-பூமிக்கு இடையே உள்ள L1 லெக்ராஞ்ச் புள்ளியை நோக்கி பயணிக்கும் பாதையில் வருகின்ற வெப்ப அலைகள் மற்றும் காந்த அலைகளை ஆராயும். மேலும் இந்த தரவுகள் எல்லாம், காந்த புயல் மற்றும் விண்வெளி வானிலை குறித்து சேகரிக்கப்பட்டது" என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Aditya-L1 Mission:
    Aditya-L1 has commenced collecting scientific data.

    The sensors of the STEPS instrument have begun measuring supra-thermal and energetic ions and electrons at distances greater than 50,000 km from Earth.

    This data helps scientists analyze the behaviour of… pic.twitter.com/kkLXFoy3Ri

    — ISRO (@isro) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:"தமிழகத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது" - மு.க.ஸ்டாலின் சூசகம்!

Last Updated : Sep 18, 2023, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.