ETV Bharat / state

ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு; கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்! - chennai district news

வீட்டு வாடகை கொடுக்க பணமில்லாததால், மூதாட்டியை கொலை செய்து நகையை திருடியதாக சென்னை ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கில் சக்திவேல் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு; கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!

author img

By

Published : Apr 24, 2023, 3:19 PM IST

ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு; கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னை பழவந்தாங்கலை அடுத்த தில்லை கங்கா நகர் 10வது தெருவில் சுந்தரி என்கிற 81 வயது மூதாட்டி தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு மூதாட்டியின் மகன் மற்றும் மருமகள் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மூக்கில் ரத்தத்துடன் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்த ஆதம்பாக்கம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகையும் 2.5 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இந்த கொலை குறித்து 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு குறித்து சக்திவேல் என்பவரை, கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது சக்திவேல் எளிதாகப் பணம் சம்பாதிக்க மூதாட்டியை கொலை செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்தார். மூதாட்டியை கொலை செய்துவிட்டு அந்த பணத்தை ஆட்டோ மூலமாக உரிமையாளர் வீட்டிற்குச் சென்று கொடுக்கும்போது, சிசிடிவியில் கொலையாளி சக்திவேல் பிடிபட்டுள்ளார்.

சக்திவேலுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் வீட்டு வாடகை கொடுக்க பணமில்லாததால், ஆதம்பாக்கத்தில் கடந்த 22ஆம் தேதி சிவகாம சுந்தரி மூதாட்டியைக் கொலை செய்து 2.5 லட்சம் பணம் மற்றும் 15 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்துள்ளார்.

இதுவரை சக்திவேல் 3 மூதாட்டிகளை கொலை செய்து பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு கே.கே. நகரில் சீதாலட்சுமி, அதே பகுதியில் மற்றொரு மூதாட்டி மற்றும் சமீபத்தில் ஆதம்பாக்கத்தில் சிவகாம சுந்தரி என்ற மூதாட்டியைக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

இதையும் படிங்க: Lingusamy: செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டணைக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.