ETV Bharat / state

"வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு வில்லியாக நடிப்பேன்” - வரலட்சுமி சரத்குமார்! - chennai news

”வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு வில்லியாக நடிப்பேன்” என நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார் ’மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

’மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் வரலட்சுமி சரத்குமார்

author img

By

Published : May 15, 2023, 10:47 PM IST

சென்னை: தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி, ஆரவ், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள ’மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்படம் வரும் மே 19 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதற்கு முன் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார் நடித்து வெளியான 'கொன்றால் பாவம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் தயாள் பத்மநாபன் “கொன்றால் பாவம் மாதிரி தரமான படம் மூலமாக ஆதரித்த அனைவருக்கும் வணக்கம். பொதுவாக ஒரு இயக்குநருக்கு ஒரு மொழியில் படம் கொடுக்கும் போது, குறைந்தபட்சம் ஒரு ஆறு மாதம் ப்ரேக் வேண்டும். மார்ச் 10-ல் கொன்றால் பாவம் ரிலீஸ் ஆனது. நல்ல ஒரு திட்டமிடல் இருந்தது. 'குரங்கு பொம்மை' போன்ற படத்தை ரீமேக் செய்ய யாருக்கும் தைரியம் வராது. ஆனால் நான் செய்தேன். 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' கரோனா காலத்தில் கதை எழுதியது.

வேறு மாதிரியான திரைக்கதை. கண்டிப்பாக நீங்கள் பாராட்டுவீர்கள். ரொம்ப நாள் படப்பிடிப்பு நடைபெற்ற படம் இது‌. 21 நாட்களில் செய்து முடித்து விட்டேன். கொன்றால் பாவம் 14 நாட்களில் எடுத்தேன். 2 பாடல்கள் மட்டுமே என்பதால் நானே பாடல்கள் எழுதிவிட்டேன். இடைவெளி காட்சியில் இருந்து ஆரவ் என்ட்ரி இருக்கும். சந்தோஷின் வளர்ச்சிக்கு இந்த கதாபாத்திரத்தை யாரும் செய்ய மாட்டார்கள்‌. ஆனால் சந்தோஷ் பிரதாப் நடித்தார். முழு படத்தையும் பெங்களூரூவில் படமாக்கினோம். அனைவருக்கும் நன்றி” என்றுக் கூறினார்.

பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார், “இந்த படத்தில் கண்டிப்பாக கன்டென்ட் இருக்கும். கதை கேட்கும் போதே த்ரில்லராக இருந்தது. படம் ரிலீஸ் ஆக போகிறது. ஆரவ்வும், நானும் பயங்கரமாக கூத்தடித்தோம். உடனே ஸ்கேன் செய்ய வேண்டாம். எங்கள் படத்தில் சர்ச்சை எதுவும் இல்லை. மற்ற படங்களில் எதாவது சர்ச்சை வைத்து விடுகிறார்கள். ஆனால் எங்கள் படத்தில் நல்ல கதை இருக்கிறது. அனைவரும் ஆதரவு கொடுங்கள்”.

அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “நான் ஒரு நடிகை. எந்த மாதிரி கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். வில்லியாக, கேரக்டர் ரோல் என எதுவாக இருந்தாலும் என்னால் அந்த கதாப்பாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்க முடியும் என்றால் கண்டிப்பாக நடிப்பேன். ரஜினிக்கு வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” என்றார்.

”வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு வில்லியாக நடிப்பேன்” - வரலட்சுமி சரத்குமார்!
’மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் வரலட்சுமி சரத்குமார்

நடிகர் ஆரவ் கூறுகையில், “கலகத் தலைவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தேன். இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். இயக்குநர் இந்த படத்தை 25 நாட்களில் முடிப்போம் என்றார். ஆனால், 21 நாட்களிலேயே முடித்தார். மிகவும் சர்ப்ரைஸாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக முக்கியம். ஒரு கதை கூறி அதே மாதிரி எடுப்பது பெரிய விசயம். ஆனால் இயக்குநர் கதை கூறி அதை விட பயங்கரமாக எடுத்துள்ளார்” என்றார்.

இதையும் படிங்க: நந்தா பெரியசாமி, சமுத்திரக்கனி இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.