ETV Bharat / state

மார்பக புற்றுநோயால் அவதிப்படும் நடிகை - மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி கேட்டு கோரிக்கை - மார்பகப்புற்று நோயால் அவதிப்படும் நடிகை கௌரி

சென்னை: மார்பக புற்றுநோயால் அவதிபட்டு வரும் நடிகை கௌரி, மருத்துவ சிகிச்சைக்காக தனக்கு பன உதவி செய்ய வேண்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோ பதிவை வெளியிட்ட நடிகை
வீடியோ பதிவை வெளியிட்ட நடிகை
author img

By

Published : Sep 22, 2020, 1:01 AM IST

2010ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை கௌரி (சிந்து). இந்த படத்திற்குப் பிறகு பல்வேறு படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது மார்பக புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவந்த நிலையில், அவரது ஒரு பக்க மார்பகம் நீக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற முடியாமல் போனதால், அவருக்கு முதுகு எலும்பு பிரச்னையும் ஏற்பட்டது. இதனால் தற்போது முதுகெலும்பு பிரச்னைக்கும் சேர்ந்து மருத்துவம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தனது மருத்துவ செலவிற்கு உதவி வேண்டும் என்று கூறி அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது, “கரோனா பிரச்னைக்கு முன்புதான், எனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற கடன் பெற்று அறுவை சிகிச்சை செய்து, ஒரு பக்க மார்பகம் நீக்கப்பட்டது.

தற்போது, மார்பில் மட்டும் 5 விழுக்காடு புற்றுநோய் உள்ளது. இதன் காரணமாக முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற முடியாததால் இந்த நோய் பரவி சிரமத்திற்குள்ளாகி வருகிறேன். ஒவ்வொரு ஊசிக்கும் 5 ஆயிரத்து 500 முதல் 9 ஆயிரத்து 500 ரூபாய் வரை செலவாகிறது. கீமோ சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பணம் இல்லாததால் இப்போது சிகிச்சை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நான் நன்றாக இருந்தபோது என்னை சுற்றி ஒரு கும்பல் இருந்தது. இப்போது என்னுடைய கஷ்ட காலத்தில் என்னுடன் ஒருவருமில்லை. இது எனக்கு மனரீதியாக வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது மிகவும் கஷ்டத்தில் நான் உள்ளேன். எனக்கு மருத்துவ உதவி செய்யுங்கள். இந்த நோயிலிருந்து நான் மீண்டு வந்து நிறைய பேருக்கு உதவி செய்வேன். எனக்கு தற்போது, நடிகர் கார்த்தி, சாய் தீனா, ஐசரி கணேஷ், ரோபோ சங்கர், சோனியா போஸ் வெங்கட், டேனியல், தீபா, சவுந்தர் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

வீடியோ பதிவை வெளியிட்ட நடிகை கௌரி

இருப்பினும் தொடர் சிகிச்சைக்கு எனக்கு பண உதவி தேவைப்படுகிறது. ஆகையால் எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறி தனது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் அந்த வீடியோவில் அவர் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: ’உங்களின் அன்பு எனக்கான உத்வேகம்’ - நடிகை மதுமிதா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.