ETV Bharat / state

விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த ஆண்டு திருமணம் - யாருடன் தெரியுமா: சீக்ரெட்டை உடைத்த சமந்தா! - Vijay Deverakonda marriage

Samantha speak about Vijay devarakonda marriage: நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த வருடம் திருமணம் என நடிகை சமந்தா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த ஆண்டு திருமணம்! யாருடன் தெரியுமா? சீக்ரெட்டை உடைத்த சமந்தா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 5:34 PM IST

விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த ஆண்டு திருமணம்! யாருடன் தெரியுமா? சீக்ரெட்டை உடைத்த சமந்தா

சென்னை: இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் படம் ‘குஷி’. காதல் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா பேட்டி கொடுத்துள்ளனர். அந்தப் பேட்டியில் சமந்தா விஜய் தேவரகொண்டாவை பற்றியும் அவரது திருமணம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து சமந்தா பேசியிருப்பதாவது, “விஜய் தேவரகொண்டாவைப் பார்க்கும் பலரும் அவர் ஒரு ரெளடி, ரக்ட் பாய் என நினைப்பார்கள். ஆனால், உண்மையில் அவர் மிகவும் ஒழுக்கமானவர். நேரத்திற்கு தூங்கி எழுந்திருப்பார். நம்ப மாட்டீர்கள், அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது. காதல் கதைகள் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். ‘குஷி’ படத்தில் காதல் நன்றாக வரக் காரணம் விஜய் தேவரகொண்டாவும் தான். இந்தப் படத்திற்குப் பிறகு திருமணம் குறித்து அவரது கருத்து மாறி இருக்கிறது. இந்த வருட இறுதியில் அவர் திருமணம் செய்து கொள்வார். ஒவ்வொரு வருடமும் அடுத்த இரண்டு, மூன்று வருடத்தில் எனச் சொல்வார். ஆனால், இந்த வருட இறுதியில் அவரது கேர்ள் ஃபிரண்டை திருமணம் செய்து கொள்வார்” என்றார் சமந்தா.

அதனைத்தொடர்ந்து, பல சுவாரசியமான கேள்விகள் இருவரிடமும் கேட்கப்பட்டது. அதில், நீங்கள் எது செய்தாலும் ஸ்டைலாகவும், பெண்கள் விரும்புவதாகவும் இருப்பது எப்படி? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா, ”அவர்களது சம வயதில் இருப்பதால் என்னை இளைஞர்களுக்கு பிடிக்கிறது என்று கூறினார். எல்லாவற்றையும் சிரிப்புடன் எதிர் கொள்கிறீர்கள் அது எப்படி? என்பதற்கு சிரித்தபடியே, வாழ்க்கை சில அனுபவங்களை கொடுக்கும், அது போன்ற அனுபவங்கள் வரும் போது எல்லோரும் என்ன செய்கிறார்களோ அப்படித்தான் நானும்.‌ எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க புத்தகம் என்னிடம் இல்லை” என்றார்.

குஷி உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல் என்ற கேள்விக்கு பதில் அளித்த சமந்தா, ”நான் படங்கள் தேர்வு செய்யும் போது யோசித்து தான் செய்வேன். எது வந்தாலும் ஓகே என்பது இல்லாமல் நல்ல கதைகளுக்காக காத்திருப்பேன். குஷி கதை சொல்லும் போது சாதாரண காதல் கதை போன்று தான் தோன்றியது ஆனால், திடீரென காதல் கதையை தாண்டிய ஒன்றாக மாறியது. மேலும், கடவுள், கர்மா, விதி, பத்தியெல்லாம் நமக்கு கஷ்டங்கள் வரும்போது நாம் நினைப்போம் அல்லவா அதுபோன்று அழகான கதையை அமைத்துள்ளார் இயக்குனர். இப்படமானது எல்லோரையும் கவரும்” என்றார்.

மேலும், சக நடிகர்கள் பற்றி சமந்தா பேசும்போது, ”என்னுடைய நடிப்பிற்கு நல்ல பாராட்டு கிடைத்துள்ளது என்றால் அதற்கு என்னுடன் நடித்த சக நடிகர்களின் பங்கும் இருப்பதாக நினைக்கிறேன். நீதானே என் பொன் வசந்தம் படம் முதல் குஷி வரை வளர்ச்சி இருக்கிறது. அந்த வளர்ச்சி என்னுடன் நடித்த சக நடிகர்களால் வந்திருப்பதாக நினைக்கிறேன்” என்றார்.

இப்படத்தில் மறக்கமுடியாத தருணம் எது என்பதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா ”இந்த படத்தில் நிறைய சிரித்தேன், இந்த படத்திற்கான எனது சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட நினைத்தேன். சமந்தா, வெண்ணிலா கிஷோர், ராகுல், ராமகிருஷ்ணா, இயக்குனர் ஷிவாவுடன் இருந்தது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என்றார்.

இதையும் படிங்க: ஓணம் பண்டிகை: தமிழக - கேரள எல்லையில் இரு மாநில போலீசார் தீவிர வாகனச் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.