ETV Bharat / state

Meena: "எப்போதும் புதியவர்களை ஊக்குவிப்பேன்" - 'நீ போதும்' விழாவில் மீனா பேச்சு! - சினிமா செய்திகள்

சென்னையில் 'நீ போதும்' என்ற ஆல்பத்தை நடிகை மீனா வெளியிட்டார். பின்னர் விழா மேடையில் பேசிய அவர், நான் எப்போதும் புதியவர்களை எப்போதும் வரவேற்பவள். அது இயக்குனரோ, நடிகர்களோ, தயாரிப்பாளரோ அவர்களை ஊக்குவிப்பது எனது பழக்கம் என்று கூறினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 15, 2023, 7:36 AM IST

'நீ போதும்' ஆல்பத்தை வெளியிட்ட நடிகை மீனா

சென்னை: நிரஞ்சனி அசோகன் நடித்துள்ள 'நீ போதும்' என்ற ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 14) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை மீனா, நிரஞ்சனி அசோகன், நடிகர் பரத், ஷ்யாம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிரஞ்சனி அசோகன், "இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பல தடைகளை கடந்து இந்த பாடல் எடுக்கப்பட்டு உள்ளது. உங்களுக்கு இந்த பாடல் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றும் இந்த பாடலுக்கு உதவியாக இருந்த நடிகர் ஆர்யா, ரேவதி உள்ளிட்டோருக்கு நன்றி என்றும் கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய நடிகர் பரத், நிரஞ்சனி என்னுடைய யாக்கை திரி படத்தில் எனக்கு ஜோடியாக நடித்து உள்ளார். அவர் இந்த பாடலிலும் சிறப்பாக நடித்து உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். அடுத்து என்ன பண்ண வேண்டும் என்று எப்போதும் நிரஞ்சனி யோசித்து கொண்டே இருப்பார்.மேலும் அவர் இயல்பாக நடிக்கக் கூடிய நடிகை என்றும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய நடிகர் ஷ்யாம், "என் வீட்டில் 'நீ போதும்' என்று சொன்னது இல்லை. நீ தேவை இல்லை என்றுதான் சொல்கிறார்கள். தற்போது பெண்கள் எவரும் ஆண்களை எதிர்பார்த்து இருப்பது இல்லை என்றார். மேலும் சினிமாவில் என்னை நம்பித் தான் வந்தேன். அப்பாவோ மாமனாரோ யாரும் இல்லை. நிரஞ்சனி இந்த பாடலில் நன்றாக நடித்து உள்ளார்.மேலும், நான் இந்த நிகழ்ச்சிக்கு மீனா வருகிறார்கள் என்பதால் தான் வந்தேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் மேலும் நடிகர் பரத் எனது கனவில் வந்துகொண்டே இருக்கிறார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாவீரன் பட 'வண்ணாரப்பேட்டையிலே' பாடல் வெளியானது!

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை மீனா, "இந்த பாடலை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எப்போதும் புதியவர்களை எப்போதும் வரவேற்பவள். அது இயக்குனரோ, நடிகர்களோ, தயாரிப்பாளரோ அவர்களை ஊக்குவிப்பது எனது பழக்கம். இந்தப் பாடலை கேட்டதும் புதிதாக இருந்தது.

நானும் விக்ரமும் சேர்ந்து நீண்ட வருடங்களுக்கு முன் ஒரு ஆல்பம் பாடல் நடித்திருந்தோம். அப்போது அதனை எப்படி ரசிகர்கள் இடம் கொண்டு செல்வது என்று தெரியாததால் அது வெளியாகவே இல்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை நிறைய தனியிசை பாடல்கள் அதிகம் வெளியாகின்றன. மேலும், இந்தப் பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Hrithik Roshan: இணையத்தை கலக்கும் ஹ்ரித்திக் ரோஷனின் ஜிம் ஒர்க் அவுட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.